மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...
உண்மைதான் ..
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...
உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?
குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200. தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...
இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..
அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..
31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 2800
------------------------------ --
மொத்தம். 12800
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
12800*3%= 384@390
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 390
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 14990
------------------------------ --
1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 2800
தனி ஊதியம். 750
------------------------------ --
மொத்தம். 13550
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
13550*3%= 406.50@410
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 410
தனி ஊதியம். 750
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 15760
------------------------------ --
குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .
இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..
1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்
9300+4200
பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 14600
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
14600*3%= 426@430
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 410
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 15010
------------------------------ --
முடிவு :
----------
மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010
தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760
மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..
15760
15010
------------------
750
------------------
தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு
5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..
மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..
இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..
கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...
தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...
ஆக்கம்
------------
சுரேஷ் மணி
நாமக்கல்
9943790308