தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.