தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி
தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை 39 ேகாடி செலவில் கட்டப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், வேலூரில் 2, தர்மபுரி 1, திருவண்ணாமலை 3, விழுப்புரம் 4, சேலம் 1, கோவை 2, திண்டுக்கல் 1, திருச்சி 2, பெரம்பலூர் 1, கடலூர் 3, திருவாரூர் 4, தஞ்சாவூர் 1, புதுக்கோட்டை 5, மதுரை 1, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, கிருஷ்ணகிரி 1 உள்பட தமிழகம் முழுவதும் 36 பள்ளிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 39 கோடி செலவில் இப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

பொதுப்பணித்துறையின் மூலம் இதற்கான பணிகளுக்கு தற்போதுடெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 15 கோடி செலவில் 137 கூடுதல் வகுப்பறைகள், 3 கோடி செலவில் அறிவியல் ஆய்வகம்,1.71 கோடி செலவில் கணினி அறை, 3.73 கோடி செலவில் கலை மற்றும் ஓவிய அறை, 5.34 கோடி செலவில் நூலக அறை கட்டப்படுகிறது.
இந்த பணி முடிந்த பிறகு கணினி, ஆய்வக தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது. இதற்காகவும், தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதத்திற்குள் முழுவதுமாக இப்பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.