10 நாட்களில் மாணவர் சேர்க்கை; மருத்துவ கவுன்சில் கெடுபிடி
’நீட்’ தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள்
மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், ’கெடு’ விதித்து உள்ளது
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, ’நீட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.’நீட்’ தேர்விலில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், ’நீட்’ தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசு புதிய அவசர சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில்,மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில், புதிய வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதில் தர, உச்சநீதிமன்றம் .
இதற்கிடையில், வரும், 31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கும்படி,தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன், அனைத்து மாநிலங்களிலும், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், தமிழகத்திலும்,மாணவர் சேர்க்கையை உரியகாலக்கெடுவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், இன்னும், 10 நாட்களில் மாணவர்சேர்க்கையை முடிக்க வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ’நீட்’ தேர்வு வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கூடுதல்அவகாசம் கேட்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.