>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்

2012-ல் வெளியிடப்பட்ட 4000-கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ICT எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது சுருக்கப்பட்டு 1000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது.... இதனால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம்  சரிந்துள்ளது என்றே கூறலாம்...


 தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 90,00,000 மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய நிதிப்பணம் திறமையாகப் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பப்பட்டதுதான் கணினிக்கல்வி மீது நடத்தப்பட்ட பகிரங்க படுகொலை...

1992-லிருந்து இன்று வரையில் கணினி அறிவியலின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே சுமார் *_2.5 இலட்சம் கோடி‌.._*  இதுபோன்ற கல்வியை சீரழிக்கும் நிகழ்வு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் அரங்கேறியுள்ளன...

  சென்ற ஆட்சிக்காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ₹.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது... ஆனால் அந்த நிதிப்பணமும் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பியது தமிழக அரசு.... இப்படி தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதன் விளைவுதான், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட கல்வியில் பின்தங்க நேர்ந்தது...

 கணினி ஆய்வகங்கள், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் என இதற்காக ஆறு முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு *டெண்டர் விடப்பட்டு ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது...*

 தமிழக வரலாற்றில் ஒரு துறை இத்தனை அமைச்சர்களை சந்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது... சென்ற ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் *_சி.வி.சண்முகம்,  சிவபதி,  அக்ரி.கிருஷ்ணமூர்த்தி,  பழனியப்பன்,  வைகைச்செல்வன்,  வீரமணி_*  என ஆறு அமைச்சர்களும்,  தற்போதைய ஆட்சியில்  *_பெஞ்சமின்,  மா.ஃபா. பாணடியராஜன்,_*  தற்போது *_செங்கோட்டையன்_*  என ஆறு ஆண்டுகளில் ஒன்பது அமைச்சர்களை மாற்றம் செய்தது தமிழகக் கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு...


குறிப்பு:கணினி ஆசியர்கள் சங்க்த்தின் சார்பில் இதுவரை கல்வி அமைச்சர் ,செயலாளர் ,இயக்குனர் ,மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் மனு கொடுத்து கால்கள் தேய்ந்து போயின நாங்கள் எங்கள் அரசு பணிக்காக போராடவில்லை இதில் 90இலட்ச மாணவர்களின் கல்விக்காக போராடுகின்றோம் தற்போது இருக்கும் கல்வி அமைச்சரை இதுவரை 36முறையும் செயலாளர் அவர்களை 15க்கும் மேற்ப்பட்ட முறையும் ,பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் மனு கொடுத்து கொடுத்து மன தோய்வுதான் அடைந்தது எங்கள் மனுக்கு பதில் இல்லை.கொடுத்தது பதில் இணையதளத்தில் முதல்வர் தனிப்பிரிவு மட்டும் தான் பதில் சொன்னது
நிராகரிக்கப்பட்டது என்று.
(முதல்வர் தனிபிரிவில் கணினி கல்வி என்ற வாரத்தைக்கு பொருள் நிராகரிக்கப்பட்டது என அர்த்தம்)அனைத்து மனுக்கும் பதில் கணினி மட்டும் தான் கொடுத்தது தவிர மனிதர்கள் அதையும் தரவில்லை ..

தற்போது இருக்கும் கல்வி முதன்மை செயலாளர் ஐயா அவர்களுக்கு மனு அளித்தபோது நான் துறைக்கு புதிது என்று எங்களிடம் கூறினார் ஆனால் மறுதினம் 1000பள்ளிக்கு கையொப்பம் செய்துள்ளார் (அரசாணை எண்:41,42).

"கடந்த இரண்டு மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன.இதில், ஆளும் அதிமுகவும் அடக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39019 பேர் இப்போது பி.எட். படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. மொத்தமாக 39 ஆயிரம் பேரும் வாழ்வாதராத்தை இழந்து நிற்கிறோம்.

தற்போது இருக்கும் மதிப்புமிகு ஆனால், 6 ஆண்டுகளில் 9 கல்வி அமைச்சர்களை மாற்றிய தமிழக அரசு *திருமதி, சபீதா*  போன்ற அதிகாரிகளை எட்டு வருடங்களாக மாற்றாமல் இருந்தது மிகவும் வேடிக்கையாக உள்ளது...

 ஒரு அமைச்சரோ (அ) அதிகாரியோ ஒரு துறையில் புதிதாக நியமனம் செய்த பின்னர் அந்த துறைக்கான முழு செயல்வடிவத்தையும் அறிந்து கொள்ளவே ஆறு மாதங்கள் ஆகின்றன... ஆனால், அவர் தனது செயலை தொடங்கும்போதுதான் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்... இது என்ன கொடுமை...

 இறுதிவரையில்... அரசு பள்ளிகளும், அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளும் விளங்காமல் போவதே விலக்கப்படாத விதி என அரசாணைகளில் மாற்றி எழுதிவிட்டார்களோ என ஐயமாகிறது...

 இந்த  ICT திட்டத்தில் தகுதியுள்ள கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல்,  ELCOT போன்ற ஒப்பந்த ஊழியர்களை நியமித்து *_பி.எட்., கணினி ஆசிரியர்களின் வயிற்றிலடித்ததுதான் தமிழக அரசின் சாபம்_*

  பாடநூல் கழக அதிகாரிகள் ICT திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை எனவும், அதைப்பற்றி இனிமேல்தான் ஆலோசனை செய்யப் போகிறோம் என கூறுவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது...

 இதுபற்றி, முன்னால் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், முன்னால் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த ICT திட்டம் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.... பிறகு இது, 110-விதியின் கீழ் 4000 பள்ளிகள் என குறைத்து அறிவிக்கப்பட்டது... தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு 1000 பள்ளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது... இதுவும் 1000 பள்ளிகளிலாவது செயல்படுமா (அ) 500 என குறையுமா என பொருத்துருந்துதான் பார்க்க வேண்டும் என கூறுகிறார்...


*தமிழகத்தில்  மட்டும் கணினி கல்விக்கும் கணினி ஆசியர்களுக்கும்  வந்த சோதனை!!!*

இவ்வாறாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், அடக்குமுறைகளாலும் மற்ற மாநிலங்களை விட தமிழக கல்விதுறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

*கணினி அறிவியல் பாடபுத்தகம் குப்பை தொட்டியில்..*
" சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில்,  கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 6 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது. அதே நேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் இருக்கிறது. அரசு நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம் ஐ.டி.சி. திட்டமும் அமலில் உள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கணினி பயிற்சித் தரப்படுகிறது. மாணவர்களுக்கு இல்லை. அதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில்தான் அரசுப் பள்ளிகளில்,  கணினி வழிக்கல்வி,  2011ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் அறிமுகமானது. தமிழ்நாடு பாட நூல் கழகமும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களும் அச்சிட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

ஏழைக் கிராப்புற மாணவர்கள் கணினி அறிவுப் பயிற்சி பெறுவதை தமிழக அரசு  விரும்பவில்லையா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள்,  முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வியை வழங்கிவருகின்றன. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மேலும் புதியதாக 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுமதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அப்டேட் கல்வி இல்லாத நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் இருந்து 11 லட்சம் மாணவர்கள்,  கடந்த 6 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடைவெளியை தமிழக அரசு எப்போது உணரும் என்று  தெரியவில்லை.

50இலட்சம் மாணவர்களின் கனவான கணினி அறிவியல் பாடபுத்தகம் இன்று குப்பை தொட்டியில் (RTI  தகவல்)அரசுப்பள்ளிகள் சமச்சீர் கல்வியல்  கணினி அறிவியல் பாடபுத்தகம்

2011ஆம்  ஆண்டு அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.இன்று இதன் நிலையை யார் அறிவார்..(குப்பையில் உறங்கும் 6-10 கணினி அறிவியல் பாடபுத்தகம்)தமிழ்நாடுபாடநூல் கழகம் RTIயில் தந்த அதிர்ச்சியான தகவல்.

 கணினி ஆசிரியர்களாகப் பள்ளிகளில் பணியாற்றுவதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கணினிகளைக் கையாளவும் தொழில் நுட்ப வளர்ச்சிப் பெறவும் உதவிட முடியும் என்ற எங்களின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம் இன்றளவும் இருண்டுகிடக்கிறது.

மத்தியரசின் நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகத்திலும் விரைவில் கணினி கல்வி கொண்டுவரவேண்டும்..

இனியாவது கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள தமிழக அரசாங்கம், அரசுப்பள்ளிகள் அனைத்திலும்.

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப்படமாக
கொண்டுவர மாண்புமிகு கல்வி அமைச்சர் மதிப்புமிகு செயலாளர் தமிழகத்தில் கணினி கல்வியை ஆறாம் வகுப்பிலிருநதே ஆறாவது பாமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டம் விரைவில்.

செய்தி:ராஜ்குமார்,
இணைய ஆசிரியர்.

வெ.குமரேசன் ,
பொதுச்செயலாளர் ,
9626545446 ,9789180422 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கம் சங்கம்655/2014.