PGTRB - ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது......
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் மொத்தப் பதவிகளில் 4 சதவீதம் ஒதுக்க வேண்டும். அச் சட்டத்தின்படி 4 சதவீதம் என்ற அளவீட்டில் 67 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு வருமாறு:
கடந்த மே 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேட்-1 பணிக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம். ஆனால், எந்த நியமனத்தையும் ெசய்யக்கூடாது. வழக்கு வரும் 16ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.