>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 16 ஜூன், 2017

அரசு இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை

சென்னை: ''அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, உயர ்கல்வி துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு இன்ஜி., கல்லுாரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மீண்டும், 6,000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 8.29 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* அரசின் பலவகை தொழில் நுட்ப கல்லுாரிகளில், கட்டடவியல்; மின்னியல் மற்றும் மின்னணுவியல்; மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்; இயந்திரவியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய பிரிவுகளில், மாணவர்கள், டிப்ளமா படிக்கின்றனர். அவர்கள், எங்கும், எதையும் கற்கும் வகையில், அண்ணா பல்கலை மூலம், 36 பாடங்களில், ஒரு பாடத்திற்கு, 20 மின் கற்றல் ஒளித்தொகுதி என்ற, 'இ - லேர்னிங் வீடியோ மாட்யூல்ஸ்' வழங்கப்படும்
* சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், 2.5 கோடி ரூபாயில், சுனாமி, நில அதிர்வு போன்ற பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை எளிதாக விளக்க, ஆறு அடி விட்டம் உடைய, முப்பரிமான அறிவியல் கோளம் அமைக்கப்படும்.
* வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலையின், முதுகலை விரிவு மையம், விழுப்புரத்தில் செயல்படுகிறது. அங்கு, மூன்று கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படும். அழகப்பா பல்கலையில் திறன் வங்கி மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.