பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு துவங்கவில்லை: மாணவர்கள் அச்சம்
பி.ஆர்க்., நுழைவுத்தேர்வு முடிவு வெளியாகியும், விண்ணப்ப பதிவை அண்ணா பல்கலை துவக்காததால், குறித்த நேரத்தில் கல்லுாரியில் சேர முடியுமா என, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கட்டட வடிவமைப்புக்கான, பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., படிப்புகள், 'தேசிய ஆர்க்கிடெக்' கவுன்சில்' அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன.இதற்காக, 'நாட்டா' என்ற, தேசிய திறன் மற்றும் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும், ஏப்., 16ல் நடந்தது. மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள், ஜூன், ௧௦ல் வெளியாகின. தேர்வில் பங்கேற்ற, 37 ஆயிரத்து, 246 பேரில், 24 ஆயிரத்து, 540 பேர், குறைந்தபட்சமான, 80 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 'நாட்டா' தேர்வு முடிவுகள் வெளியான பிறகும், அண்ணா பல்கலையின், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி சார்பில், பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: நாட்டா தேர்வின், 'ரிசல்ட்' வந்த பிறகும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை, அண்ணா பல்கலை இன்னும் அறிவிக்கவில்லை.
அதனால், கவுன்சிலிங்கில் இடம் கிடைக்குமா அல்லது தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர வேண்டுமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில், பல கல்லுாரிகளில், 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கேட்கப்படுகிறது. அவ்வளவு தொகையை செலுத்த முடியாத மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டில் சேர கவுன்சிலிங்கை எதிர்பார்த்துள்ளனர்.
எனவே, தாமதமின்றி, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவை துவக்க வேண்டும். இன்னும் தாமதிப்பது, மாணவர்களுக்கு அச்சத்தை அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.