பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களை அரசு வெளியிடும் முன்பே தனியார் வெளியீட்டாளர்கள் வழி காட்டி புத்தகங்களை (கைடு) விற் பனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கைடுகளில் உள்ள வினாத்தாள் முறை அதிகாரப்பூர்வமானதா என பெற்றோர், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கைடுகளில் உள்ள வினாத்தாள் முறை அதிகாரப்பூர்வமானதா என பெற்றோர், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன், துறைச் செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 1 வகுப்புக்கு மொத்தம் 600 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்-2 என மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க உள்ளனர்.
பிளஸ் 1 அரசு பொதுத் தேர் வுக்கான புதிய மாதிரி வினாத் தாள்கள் இதுவரை வெளியிடப் படவில்லை. இதற்கான கமிட் டியை பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக மாதிரி வினாத்தாள் வெளியாகலாம் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான புதிய வினாத்தாள்கள் வடிவில், கைடுகளை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய் வது மாணவர்களுக்கு குழப் பத்தை ஏற்படுத்தும் என பெற் றோர், கல்வியாளர்கள் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிப் பாடப் புத்தகங்கள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் கைடுகளை, 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியிடு கின்றன. இவை அரசுப் பாடப் புத்தகங்களைப் பின்பற்றியே கைடு களை தயாரிக்கின்றன. பிளஸ் 1 வகுப்புக்கு 600 மதிப்பெண் களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப் படும் என அறிவித்த நிலையில், அதற்கான மாதிரி வினாத் தாள்களை அரசு இதுவரை வெளி யிடவில்லை. அதற்குள் பிளஸ் 1 பாடங்களுக்கான கைடுகளை சில தனியார் வெளியீட்டாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந் துள்ளனர்.
காலாண்டுத் தேர்வின்போது தான் பிளஸ்1 பொதுத் தேர்வுக் கான புதிய வினாத்தாள் முறை தெரியவரும். அதற்குள் யூகத்தின் அடிப்படையில் கைடு களை தயாரித்து விற்பது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்கும் இலவச பாடப் புத்தகங்களே பற்றாக் குறையாக இருக்கும் சூழலில், பாடப் புத்தகங்களை சில புத்தக விற்பனையாளர்கள் நகல் எடுத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ரூ.100-க்கு நகல் எடுக்கப்படும் புத்தகம் ரூ.1,200 வரை விற்கப் படுகிறது.
சிபிஎஸ்சி புத்தகங்களுக்கு என்சிஆர்டி (தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம்) பதிப்புரிமை இருப்பதுபோல், தமிழக பாடநூல் நிறுவனம் வெளியிடும் புத்தகங்களுக்கு எஸ்சிஆர்டி (மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம்) அமைப்பு உள்ளது. என்சிஆர்டி அனுமதியைப் பெற்று தனியார் வெளியீட்டாளர்கள் கைடுகளை வெளியிட்டால் அரசுக்கு கணிச மான வருவாய் கிடைக்கும்.
அனைத்து துறைகளுக்கும் தணிக்கைக் குழு இருப்பது போன்று, பள்ளிப் பாடப் புத்தக கைடுகளுக்கும் தணிக்கைக் குழு தேவை. அரசு வெளியிடும் புத்தகங் களைப் பயன்படுத்தி கைடுகளை வெளியிடுவோர், அரசிடம் முறை யான அனுமதியைப் பெறும் முறையை கொண்டு வரவேண்டும். பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் பள்ளிக் கல்வித் துறை, தனியார் கைடுகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறிய தாவது: மாவட்ட வாரியாக பிளஸ் 1 புதிய தேர்வு முறை வினாத்தாள் வடிவமைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு காலாண்டுத் தேர்வுக்கு முன்பாக, வினாத்தாள் மாதிரியை பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பிக்கும். ஆகஸ்டு, செப்டம்பரில் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகும்.
இம்முறை பிளஸ் 1-க்கு பருவமுறைத் தேர்வு ரத்து செய் யப்பட்டு, மாதிரி தேர்வுகளுடன் நேரடியாக காலாண்டுத் தேர்வு நடக்க வாய்ப்பு உள்ளது. பிளஸ் 1-க்கு பாடத்திட்டம் மாற வில்லை. எனவே, முன்கூட்டியே கைடுகளை வெளியிடுவதன் மூலம் மாணவர்களை தேர்வுக்குத் தயார் படுத்த உதவும். இதனால் வினாக் கள் எப்படி அமைந்தாலும், மாண வர்களால் விடையளிக்க முடியும்.
கைடுகளை வெளியிடுவோர் வியாபார நோக்கில் செயல்படு கின்றனர். குழப்பத்தை தவிர்க்க, தாமதமின்றி முன்கூட்டியே புதிய தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வடிவமைப்பை அரசு வெளி யிட்டிருக்க வேண்டும் என்றார்.
ஒரு வாரத்தில் வெளியாகும்
பிளஸ் 1 வகுப்புக்கு தனியார் கைடுகள் விற்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட இருப்பதால், கேள்வித்தாள் எப்படி இருக்குமோ என்று மாணவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இதைப் போக்கும் வகையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார்.