4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்
அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை. இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஶ்ரீவத்சவ், '700 மெகாஹெர்ட்ஸில், 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி' மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் பி.எஸ்.என்.ல் 4ஜி சேவையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. 700 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றை வீடுகளுக்குள் நன்கு ஊடுருவும் தன்மை கொண்டதாம். இதனால் உட்புற பகுதிகளில் சிறந்த சேவையை அளிக்க முடியும் என்கிறார்கள்