20,558 அங்கன்வாடி மையங்களுக்கு 'மிக்சி'
தமிழக அரசு, 1.75 கோடி குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது, மின் அடுப்பு வழங்கியுள்ளது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, கொள்முதல் செய்தது; தமிழகத்தில், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இந்த மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சத்து மாவு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில், உணவு சமைக்க, 9,000 மையங்களுக்கு, மிக்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 20 ஆயிரத்து, 558 மையங்களுக்கு, மிக்சிகள் வழங்கப்பட உள்ளன. நுகர்பொருள் வாணிப கழகமே, இதற்கான மிக்சிகளையும் கொள்முதல் செய்ய உள்ளது.

ஏற்கனவே, வீடுகளுக்கு வழங்கிய இலவச பொருட்கள், பழுதடைந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல வீடுகளில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது, தரமான மிக்சிகள் வாங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என்றார்.