18 ஆயிரம் பள்ளிகளுக்கு CBSE, உத்தரவு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நவ., 30க்குள், உட்கட்டமைப்பு வசதி குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இணைப்பில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் வித்யாலயா மற்றும் ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன.
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேரடியாக
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேரடியாக
நடத்துகிறது. மேலும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு உள்ளிட்ட, பல தேர்வுகளையும் நடத்துகிறது.
இந்த தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. சில தேர்வு மையங்களில், குடிநீர், பெஞ்ச், மின் விசிறி, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை என, புகார் எழுந்தது. சில பள்ளிகளில், நர்சரி குழந்தைகள் அமரும் பெஞ்சுகள் தான், தேர்வர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. எனவே, பள்ளிகளின் உட்கட்டமைப்பை, 100 சதவீதம் உறுதி செய்ய, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
தேர்வர்களுக்கு, அவர்களின் வசதிப்படியும், மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து, 8 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
அதனால், 18 ஆயிரம் பள்ளிகளும், தங்கள் உட்கட்டமைப்பு விபரங்களை, புகைப்பட ஆதாரத்துடன், 'ஆன்லைனில்' பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, நவ., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.