தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய திறனாய்வு தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படிப்போர் www.tngdc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.50-உடன் ஆகஸ்ட்31-க்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்திலேயே அறியலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்தின் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.