தமிழகத்தில் அரசு பள்ளிகள் காணாமல் போகும் அவலம் !!!
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 மாவட்டங்களில் உள்ள 38 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது. இதற்கு என்ஜிஓ.,க்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 155 பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையத்தில் உள்ளது
ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, ஆசியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, ஆசியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், மூடப்படும் நிலையில் இருக்கும் 155 பள்ளிகளில், 111 பள்ளிகளில் 25 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 36 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். 37 சதவீதம் பள்ளிகளில் மேற்கூரை இல்லாமலும், 77 சதவீதம் பள்ளிகளில் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் அல்லது நூலக வசதி இல்லாமலும், 50 சதவீதம் பள்ளிகள் விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் இல்லாமலும், 38 சதவீதம் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை இல்லாமலும், 75 சதவீதம் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமலும் உள்ளன. 22 ஆரம்பப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியரும், 103 பள்ளிகளில் 2 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மூடப்படும் நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் ஒன்றிணைக்கவோ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என்ஜிஓ.,க்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.