புதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எச்சரிக்கை.
''புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.மதுரையில், அவர் அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லாத, புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒரு பணியாளர், மூன்று பேரின் பணிகளை செய்யும் நிலை உள்ளது. தொகுப்பூதியம், தினக்கூலி அடிப்படையில், பணி நியமனங்களை தவிர்த்து, காலமுறை சம்பளத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அனைத்து துறை பணியாளர்களுடன் ஆலோசித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.