ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.இந்நிலையில், யு.ஜி.சி., வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அனைத்து பல்கலைகளும், ஆன்லைன் வழி படிப்புகளை துவங்கலாம்; அதற்கு முன், படிப்பின் விபரத்தை தாக்கல்செய்து, அனுமதி பெற வேண்டும். பல்கலை இணையதளத்தில், இந்த படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது