>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 14 மே, 2017

தலைமையாசிரியர் பாலுவால் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்காத ஐஎஸ்ஒ சான்று ஒரு மீனவ கிராமத்து பள்ளிக்கு கிடைத்தது

தலைமையாசிரியர் குலத்தின் பெருமை பாலு.
கீச்சாங்குப்பம்
நாகை மாவட்டத்தில் ஒரு பக்கம் ஆற்றையும் இன்னோரு பக்கம் கடலையும் கொண்ட அழகிய மீனவ கிராமம்.

இந்த கிராம மக்கள் தங்கள் உயிராக நேசிப்பது இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைத்தான்.காரணம் தங்களில் பலரால் முடியாத படிப்பை தங்களது குழந்தை செல்வங்கள் இங்கு தொடங்குவதாலும் தொடர்வதாலும், ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகள் உண்டு.
இந்தப் பள்ளிக்கு கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந்தேதி கடுமையான சோதனை ஏற்ப்பட்டது.அன்று சுனாமி சூறையாடிய 600 உயிர்களில் இந்த பள்ளிக் குழந்தைகள் 80 பேரின் உயிர்களும் உண்டு,பள்ளிக் கட்டிடமும் இடிந்து சேதமானது.

எந்த ஆறும், கடலும் அழகூட்டியதே அதே ஆறும் கடலும் பயமுறுத்தவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து தொலைவில் உள்ள நகர்ப்புற பகுதி பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப ஆரம்பித்தனர்.
நானுாறு பேர் படித்த பள்ளியின் எண்ணிக்கை 190க்கு இறங்கியது, இந்த எண்ணிக்கைக்கு எதற்கு 11 ஆசிரியர்கள் என்று நான்கு பேரை கல்வித்துறை இடமாற்றம் செய்தது.
இப்படி தாங்கள் பார்த்து பார்த்து பெருமைப்பட்ட பள்ளி தங்கள் கண் எதிரே அதன் பெருமையை இழந்து கொண்டிருப்பதை பார்த்து செய்வதறியாது திகைத்தனர் ஊர் தலைவர்கள்.இந்த சூழ்நிலையில்தான் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் பாலு.
நல்ல கட்டிடத்தில் தரமான கல்வியைக் கொடுத்தால் மாணவர்கள் இந்த பள்ளியைவிட்டு எங்கும் போகமாட்டார்கள் ஆகவே தரமான கல்வியைக் கொடுப்பது என முடிவு செய்தார்.ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரது ஒத்துழைப்போடும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.
நுாலகம்,ஆய்வுக்கூடம், குடிநீர், சுகாதாரமான கழிப்பறை இவற்றுடன் ஒரு வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாகவும் மாற்றினார்.ஸ்மார்ட் வகுப்றை என்றால் இந்த வகுப்பில் கனிணி இருக்கும் இதன் வழியாக புரஜக்டர் உதவியுடன் டிஜிட்டல் திரையில் பாடம் நடத்தப்படும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் யானையை பற்றிய பாடம் என்றால் வெண் திரையில் யானையைப் பற்றி ஒரு டாகுமெண்டரி படம் ஒடும்,யானை குட்டியாக இருப்பதில் இருந்த வளர்வது வரையிலும், அதன் சத்தம் உணவு வாழ்க்கை முறை என்று அனைத்து அம்சங்களும் ஒலி ஔியாக தெரியும். இந்தப் படத்தை பார்த்த பிறகு பக்கத்தில் உள்ள போர்டில் யானையைப் பற்றி பாடம் நடத்தும் போது குழந்தைகள் எந்தக் காலத்திலும் யானையைப் பற்றிய அழியாத அறிவைப் பெறுவர்.இதுதான் ஸ்டார் கிளாஸ்.
இப்படி ஒரு வகுப்பு இந்தப் பள்ளியில் நடத்தப்படுகிறது என்பதை ஊர்மக்களிடம் சொல்வதற்காக இலவச மருத்துவமுகாம் நடத்தினார் மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்கள் பள்ளி கட்டிடத்தையும்,இருந்த வசதிகளைப் பார்த்துவிட்டு அந்த வருடமே தங்களது பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்தனர் இதன் காரணமாக பள்ளியின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.
மாவட்ட நிர்வாகத்தை உரிய முறையில் அணுகி தன்னிறைவுத்திட்டம் உள்ளீட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்கிறதோ அனைத்து திட்டங்களையும் பள்ளிப்பக்கம் வரச்செய்ததன் காரணமாக அடுத்தடுத்து வந்த மாதங்களில் அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறையாகியது.
மேலும் பள்ளியில் சிறுவர் பூங்கா, மாடித்தோட்டம் அமைத்ததுடன் மாணவர்களுக்கு கூடுதலாக யோகா,கராத்தே,ஸ்போக்கன் இங்கீலீஸ் என்று பலவும் கற்றுக்கொடுத்ததை அடுத்த பழைய எண்ணிக்கையைவிட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
தனியார் பள்ளிகளின் கவர்ச்சி காரணமாக நகர்ப்புறங்களிலேயே அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டுவரும் காலகட்டத்தில், கீச்சாங்குப்பம் கிராமத்து அரசுப் பள்ளியில் மட்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றதை அடுத்து மாவட்ட கலெக்டர் உள்ளீட்டோர் பாராட்டினார்,பள்ளி ஆய்வு செய்யப்பட்டு ஐஎஸ்ஒ சான்றிதழுக்கு தகுதி பெற்றது.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க தயராக இருந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்காத ஐஎஸ்ஒ சான்று ஒரு மீனவ கிராமத்து பள்ளிக்கு கிடைத்தை அடுத்து அந்த சான்றிதழ் பெறுவதை விழாவாகக் கொண்டாடினர்,தலைமையாசிரியர் பாலுவிற்கு மக்கள் மோதிரம் அணிவித்து கவுரவித்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த விழாவிற்கு வந்த கிராம மக்கள் மேளதாளம் முழங்க தங்களால் முடிந்தது என்று பள்ளிக்கு பீரோ,பேன்,நாற்காலி,பெஞ்சு என்று சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு சீர்வரிசை கொண்டுவந்து கொடுத்தது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
தலைமை ஆசிரியர் பாலு மாநில மற்றும் தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆனாலும் அந்த பந்தா எதுவுமே இல்லாமல் விடுமுறை நாட்களில் கூட பள்ளியில் உட்கார்ந்து இந்த ஏழை எளிய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே அதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஊர் தலைவர்கள்,மக்கள்,சக ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் என பலரது உதவியும் ஒத்துழைப்பும் உழைப்பும்தான் இதைச் சாத்தியாமாக்கியிருக்கிறது ஆகவே பாராட்டு என்பது அனைவருக்கும் உரித்தானதாகும் என்கிறார் அடக்கத்துடன்.
பாலு சார் பள்ளியில் எம் பிள்ளையை சேர்க்கப் போகிறேன் என்பதை கீச்சாங்குப்பத்தில் பரவலாக பேசுவதை கேட்க முடிந்தது இப்படி ஒரு அரசுப்பள்ளியை தன் பள்ளியாக நினைத்து செயல்படும் பாலு போன்ற தலைமை ஆசிரியர்களால்தான் நாடு கொஞ்சமாவது தன் நெஞ்சை நிமிர்திக் கொள்கிறது.
தலைமை ஆசிரியர் பாலுவை பாராட்ட நினைப்பவர்களுக்கு அவரது எண்:8608227549.

+2 பிறகு என்ன படிக்கலாம் முழுவிபரங்கள் ...!!

+2  பிறகு என்ன படிக்கலாம் முழுவிபரங்கள் 

நாசா விஞ்ஞானி எடுத்த மார்க் இவ்வளவுதான்!

வேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். தமிழர்களாகிய நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துத் தானே அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். அதே வித்தையைப் பயன்படுத்தி ரிஃபாத் ஷாரூக் எந்தளவிற்கு திறமையானவர், புத்திக்கூர்மையுள்ளவர் என்பதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடும் அவரது திறமையை விடப் பன்மடங்குத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன அவரிடம். பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களைப் பார்த்துத் தமிழகப் பெற்றோர்கள் பூரித்துப் போயிருந்த அதே கணத்தில் ரிஃபாத்திடம் பேசினோம்...
"உங்களைப் பற்றிச் சொல்லுங்க ரிஃபாத்..."
"என் பெயர் முகமது ரிஃபாத் ஷாரூக். இப்போதான் +2 முடிச்சேன். `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வின் தலைமை சயின்டிஸ்ட். நான் கண்டுபிடிச்ச 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் நாசாவின் ராக்கெட்டில் கூடிய சீக்கிரமே பறக்கப்போவுது."
"நேற்றிலிருந்து இந்த கேள்விக்கு பதில் சொல்லியே அசதி ஆகியிருப்பீங்க. இருந்தாலும் கேட்குறேன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்க?"
"ஹாஹா... 750 மார்க் வாங்கியிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பிஸிக்ஸ்ல 132 மார்க். நான் 750 - 850 வரும்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரிதான் வந்துருக்கு."

"மதிப்பெண்கள் குறைந்ததற்கு வீட்டில் திட்டு விழுந்ததா?"
"அப்படி எதுவும் நடக்கலை. அம்மா, மாமா ரெண்டு பேரும் எதுவும் சொல்லலை. டீச்சர்ஸ் தான் இன்னும் கொஞ்ச அதிக மார்க் வாங்கியிருக்கலாமேனு சொன்னாங்க. இடையில் எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமப் போயிடுச்சு. காலாண்டுத் தேர்வுகள் எழுத முடியாமல் போகிடுச்சு. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்னும் நல்ல மார்க் வாங்கியிருப்பேனு சொன்னாங்க."
"இங்கே மதிப்பெண்களை வைத்துத்தான் ஒரு மாணவனின் புத்திசாலித்தனத்தை முடிவு பண்றாங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க?"
"நல்ல மார்க் வாங்கின பசங்க கண்டிப்பா நல்ல படிப்பாளியாகத் தான் இருப்பாங்க. ஆனால், அவங்க எல்லோருமே அறிவாளியானு கேட்டால், உண்மையில் எல்லோருமே கிடையாது. பாடப் புத்தகங்களை அட்டை டு அட்டை மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதி, ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை. படிக்குற பாடத்தை நல்லாப் புரிஞ்சு படிக்கிறது தான் முக்கியம்னு நினைக்கிறேன். மெமரி பவரை விட, க்ரியேட்டிவாக சிந்திக்குற தன்மை ஒரு மாணவனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கின பெரும்பாலானவங்க ஒயிட் காலர் வேலைகளுக்கு போகணும்னு தான் ஆசைப்படுவாங்க. யாரும் சயின்டிஸ்டாகவோ, ஆர்டிஸ்டாகவோ, பிஸினஸ் பண்ணணும்னோ ஆசைப்படுறது இல்லையே...
"ஒரு மாணவன் தனது கற்பனைத் திறனையோ, கலை ஆர்வத்தையோ வெளிப்படுத்த நம் பள்ளிகள் போதிய ஆதரவு தருகின்றனவா..?"
"முழு ஆதரவு தருகின்றனனு சொல்ல முடியாது, முழு ஆதரவு தரணும்னு சொல்லிக்கிறேன். பெற்றோர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம். பெற்றோர்களே தனது மகனோ/ மகளோ க்ரியேட்டிவாக, கலை அல்லது விளையாட்டு ஆர்வத்தோட இருக்கிறதை விரும்புறதில்லை. படிச்சு நல்ல மார்க் எடுத்து இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்துட்டா போதும்னு நினைக்கிறாங்க. ஸ்கூலும் `ஸ்டேட் ரேங்க் எடுத்த மாணவர்கள்'னு பேனர் வைக்க மட்டுமே ஆசைப்படுறாங்க. படிப்பைத் தாண்டி ஸ்கூல்ல மற்ற விஷயங்கள் சொல்லித் தருவது  குறைஞ்சுக்கிட்டு வருது. நிறைய ஸ்கூல்ல மாணவர்களை சயின்ஸ் எக்ஸ்பிஷனுக்குக் கூட அனுப்புறது இல்ல. மாணவர்கள் மனப்பாடம் செஞ்சு நல்ல மார்க் எடுத்தாலே போதும்னு நினைக்கிறாங்க. புதிதாய் ஏதாவது ஒண்ணு உருவாக்கணும்னு யாருமே நினைக்குறதில்லை, அப்படி ஒரு மாணவன் செய்தாலும் அதை விரும்புறதில்லை. இன்னொரு முக்கியமான காரணம், 11,12-ஆம் வகுப்புகளில் துறைகள் ரொம்பக் குறைவா இருக்கு. எனக்கு புவியியல்னா ரொம்பப் பிடிக்கும். ஆனால், இங்கே புவியியல் எடுத்தால் மேத்ஸ் எடுக்க முடியாது. மேத்ஸ் எடுத்தால் புவியியல் எடுக்க முடியாது. நமக்கு உள்ள ஆர்வத்திற்கு ஏற்றார்போல் இங்கே குரூப் தேர்ந்தெடுக்குறது ரொம்பவே சிரமம். இது தான் இன்னைக்கு இங்கே பள்ளிக் கல்வியோட நிலைமை."
"உங்களைப் போன்று  இந்த ஆண்டு +2 முடித்த உங்கள் நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
"நாம எடுத்த மதிப்பெண்களை மாற்ற முடியாது. ஆனால், நமக்குப் பிடிச்ச துறையை இனிமேல் தேர்ந்தெடுத்து நம்ம வாழ்க்கையை நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம். நீங்க படிச்ச அல்ஜீப்ரா, ட்ரிக்னாமெட்ரி எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு உபயோகப்படும். படிச்சது எதுவும் பயன்படாமல் போகாது.  பெற்றோர்களும் மற்ற மாணவர்களோடு உங்கள் பிள்ளைகளை கம்பேர் பண்ணாதீங்க, படிப்பு விஷயத்தில் அழுத்தம் கொடுக்காதீங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறையில் கண்டிப்பா திறமையானவங்களாக இருப்பாங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்களை வழிநடத்தினாலே போதும். எல்லோரும் சாதனை மாணவர்களாக உருவாகலாம்." 
குறைவான மதிப்பெண்களுக்கு உள்ளே புதைந்து கிடக்கிற எண்ணற்ற ரிஃபாத்களை நாம் அடையாளம் காண வேண்டிய நேரமிது

பள்ளித் தேர்வுகள்... விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்கண் திறந்த காமராஜரைத் தந்தது... என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன.

இவை தவிர, விருதுநகர் மாவட்டத்துக்கு மேலும் ஒரு சிறப்புப்  பெருமையும் உள்ளது. தமிழ்நாட்டிலேயே பள்ளித்தேர்வுகளில் விருதுநகர் மாவட்டம்தான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துவருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட
26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம்தான் முதல் இடம். ஒரே ஒருமுறை மட்டும் 0.13 என்ற விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இன்று வெளியான ப்ளஸ் டூ தேர்விலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 97.85 சதவிகிதம் பேர் தேர்வாகி மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பக்கத்து மாவட்டமான ராமநாதபுரம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,373 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 984 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 227 நடுநிலைப் பள்ளிகள், 132 உயர்நிலைப் பள்ளிகள், 145 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோடுவதை இந்த மாவட்டத்தில் பார்க்க முடியும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்தால் உடனடியாக ஆசிரியர் - ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு உள்ள வசதிகள் குறித்து விளக்குவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 14 விதமான மாணவர்நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலவழிக் கல்வியும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களும் சிறந்த முறையில் இயங்குகின்றன. இதனால், பள்ளிக்கு மட்டம்போடும் மாணவர்களைப் பார்ப்பதே அரிது. இடை நிற்றலும் குறைவு. தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்குச் சிறப்புப் பயிற்சி,  பாடம்வாரியாகத் தேர்வுக்கு வழிகாட்டுதல், சிரமப்படும் பாடங்களில் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துதல், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, முக்கியப் பாடங்களை உள்ளடக்கிய மாதிரித் தேர்வு நடத்துவது போன்ற விஷயங்களால் ஆசிரியர்கள் மாணவர்களைப் பட்டைத்தீட்டுகின்றனர். 
இந்த மாவட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. ஆசிரியர்- ஆசிரியைகளை, பக்கத்துப் பள்ளிகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புகின்றனர். பல விஷயங்களை அவர்களும் புதிதாகக் கற்றுக்கொள்கின்றனர். பாடம் நடத்தும்விதத்தில் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே தேர்ச்சி விகிதத்தில்  பெரிய வித்தியாசம் தெரிவதில்லை. 
படிப்பில் படுமோசமாக இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டால் மேற்படிப்பு படிக்க  வேண்டும் என்கிற ஆர்வம் மாணவர்களிடையே ஏற்பட்டுவிடும் என்பதற்காகத்தான் இந்த உத்தியை ஆசிரியர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில்இருந்து கடைநிலை ஊழியர் வரை அந்த மண்ணைச் சேர்ந்த அனைவருமே கல்வி விஷயத்தில் பொறுப்புமிக்கவர்களாக இருக்கின்றனர். 
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், மாஸ்கோவில் உள்ள  ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிபெற தேர்வாகியிருந்தான். சிறுவனை ரஷ்யாவுக்கு அனுப்பும் வசதி, பெற்றோரிடம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ரஷ்யாவில் வசிக்கும் விருதுநகரைச் சேர்ந்த தொழிலதிபர், அந்த மாணவனைத் தனது சொந்த செலவிலேயே மாஸ்கோவுக்கு வரவழைத்து, ஆராய்ச்சி மையப் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். விருதுநகர் மாவட்ட மக்கள் எங்கே சென்றாலும் மண் மீது பற்றுடன் இருப்பதால், திறமைமிகுந்த மாணவர்களுக்கு எளிதாக உதவி கிடைத்துவிடுகிறது. அந்தத் தொழிலதிபரிடம் பேசியதுபோது, ''எங்க ஊர் பையன்... அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை அவன் இழந்துடக் கூடாதுங்கிறது என்னோட எண்ணம்'' என்றார் மண்வாசனையுடன். 
விருதுநகர் மாவட்டத்தின் அடுத்த இலக்கு பொதுத்தேர்வுகளில் 100 சதவித தேர்ச்சியை எட்டுவதுதான். விருதுநகர் மாவட்டம்போலவே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மாறவேண்டும் என்பதே நமது ஆசையும்!

சனி, 13 மே, 2017

முறைகேடுகளில் ஈடுபட்டால்... துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை

'பல்கலை கழகங்களில், இனி முறைகேடுகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு, உயர்கல்வித் துறை செயலர், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் செயலர் சுனில்பாலிவால் ஆகியோர், சென்னையில், உயர்கல்வி மன்றத்தில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளை அழைத்து, கூட்டம் நடத்தினர். அப்போது, பல்கலைகளின் நிர்வாக பிரச்னைகள், நிதி நிலை, தணிக்கை அறிக்கை போன்றவை குறித்து, பல்கலை துணைவேந்தர்களும், பதிவாளர்களும் சரியான விளக்கம் தர முடியாமல் திணறினர். சிலர், 'தங்கள் பல்கலையில், எந்த ஆவணங்களும் இல்லை' என்றனர். இதனால், அமைச்சரும், செயலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, 'அனைத்து பல்கலையிலும், செலவு கணக்கு, தணிக்கை அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதுவரை நடந்த முறைகேடுகள் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும். இனி, எந்த முறைகேடும் இருக்கக்கூடாது; தவறுகளை பார்த்து சும்மா இருக்க மாட்டோம்' என, செயலர் சுனில்பாலிவால், எச்சரிக்கை விடுத்தார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 சேர கடும் போட்டி

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் சேர, மாணவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக பாடத்திட்டத்திற்கு மாறிய பள்ளிகள், மீண்டும் சி.பி.எஸ்.இ.,க்கு மாற விண்ணப்பித்துள்ளன.
தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், பாடங்களின் தரம் மற்றும் கற்பித்தல் திறன் குறைவாக உள்ளதாக, கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். அதனால், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற, தேசிய நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு, குறைந்து வருகிறது. அதிலும், மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தான் நடத்துகிறது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர, மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில், இதுவரை, பிளஸ் 2 மதிப்பெண்படி, 'கட் ஆப்' தரவரிசையில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
எனவே, அதிக, 'கட் ஆப்' மதிப்பெண் பெறுவதற்காக, பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2க்கு மட்டும், மாநில பாடத்திட்டத்தில் இணைந்து, தங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். தற்போது, நீட் தேர்வு கட்டாயமானதால், பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மீண்டும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற, பள்ளிக் கல்வித்துறையில் விண்ணப்பித்துள்ளன.

மதிப்பெண் குறைவா? : மறுகூட்டலை தவறவிடாதீர்!

பிளஸ் 2 தேர்வில், சரியான பதில் எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்தால், மறுகூட்டலுக்கும், மறு மதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இந்த தேர்வில், மதிப்பெண் குறைவாக இருந்தால், அதுபற்றி மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் பெறும், அரை மதிப்பெண்ணும், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்பில் சேர முக்கியம். எந்த விதமான பதில்களை எழுதினோம் என, மாணவர்களுக்கு தெரியும். அதற்கேற்ப மதிப்பெண் கிடைத்துள்ளதா என, மாணவர்கள், ஆய்வு செய்து கொள்ள வேண்டும். சரியான மதிப்பெண் கிடைக்காவிட்டால், மறுகூட்டல், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு தொடர்பாக, மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. முந்தைய ஆண்டுகளில், பல மாணவர்கள், மறு கூட்டல், மறு மதிப்பீடு மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மறுகூட்டலில், பல மாணவர்களுக்கு, கூட்டல் பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், மதிப்பெண் குறைந்தால், தாராளமாக மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் கேட்டால், தேர்வுத்தாளில் கூட்டல் பிழைகள் மட்டுமே, சரி செய்யப்படும். மறு மதிப்பீடு வேண்டும் என்றால், விடைத்தாள் நகலை முதலில் பெற்று, மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் சேர்த்து, விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 257 பேர் அரசு துறைகளுக்கு மாற்றம்

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 257 ஊழியர்கள், அரசு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்க ஊதியம் குறைப்பு,
யு.ஜி.சி., விதிமுறைகளின்படி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பணி நிரவல் முறையில், அரசு அலுவலகங்களில் இடமாறுதல் என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என, 5,500 பேரை, இடமாறுதல் மற்றும் ஊதிய குறைப்பு செய்ய, பட்டியல் தயாரிக்கப்பட்டது.முதல் கட்டமாக, 2016ல், உதவி பேராசிரியர்கள், 369 பேருக்கு இட மாறுதல் அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் உள்ள பணிகளுக்கு, 87 பேருக்கு மட்டும் இட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, 249 அலுவலக உதவியாளர்கள், மூன்று இளநிலை உதவியாளர்கள், ஐந்து காவலர்கள் என, 257 பேருக்கு இட மாறுதல் உத்தரவு, அந்தந்த துறை தலைவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், கூட்டுறவு, வேளாண்மை, சமூகத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், புள்ளியியல் மையம் ஆகிய ஐந்து துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த துறைகளின் கீழ் காலியாக உள்ள அலுவலகங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை, வேலுார், சென்னை ஆகிய ஊர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதால், அங்கு சென்று பணியில் சேருவதில், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புதிய பாடப்பிரிவுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு, பேராசிரியர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்திலுள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஐந்து ஆண்டுகளில், 959 புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதில், ஒவ்வொரு இளநிலை பாடப்பிரிவுக்கும், தலா, ஆறு; முதுநிலையில் தலா, இரு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு புதிய பேராசிரியர்களை நியமிக்கவில்லை. அதனால், ஏற்கனவே பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. பல கல்லுாரிகளில், பேராசிரியர்கள் இல்லாமல் பாடம் நடத்த முடியவில்லை. அதனால், தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலாவது, புதிய பாடப்பிரிவுக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நாட்டா' நுழைவு தேர்வில் குளறுபடி : மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை

பி.ஆர்க்., என்ற, கட்டடக்கலை படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதை போல, பி.ஆர்க்., என்ற கட்டடக்கலை படிப்பிலும் சேரலாம். தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், 4,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுவர். பி.ஆர்க்., படிப்பில் சேர, 'நீட்' போன்று, தேசிய அளவில், 'நாட்டா' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஆண்டு தோறும், மே, ஜூனில், ஆன்லைனில் நடத்தப்படும். மாணவர்களின் விண்ணப்பத்துக்கு ஏற்ப, ஆன்லைனில் தினமும் தேர்வு நடத்தப்படும்.இந்த ஆண்டு, 'நாட்டா' நுழைவு தேர்வு விதிகள், திடீரென மாற்றப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நாளில், ஏப்., 16ல், எழுத்து தேர்வு நடந்தது. இதுகுறித்து, கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சரியான அறிவிப்பு வழங்கவில்லை. அத்துடன், இந்தத் தேர்வில் புதிதாக, கணித தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்தும், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற குளறுபடிகளால், தமிழக மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கூறியதாவது: மருத்துவ படிப்பில், 'நீட்' தேர்வு போன்று, பி.ஆர்க்., படிப்பிற்கான நுழைவு தேர்வு குறித்தும், தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு, 'நாட்டா' தேர்வு குளறுபடிகளால், ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள், தேர்வை எழுத முடியாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர முடியுமா என்ற, குழப்பத்தில் உள்ளனர்.எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மீண்டும் தேர்வை நடத்த, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீருடை பணியாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய பொதுத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' என்ற நுழைவுச் சீட்டு, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவலர்கள்; 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள்; 1,512 தீயணைப்போர் பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை, ஜன., 23ல் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில், முதன் முறையாக, திருநங்கைகளும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு, வரும், ௨௧ம் தேதி, தமிழகம் முழுவதும், 410 மையங்களில் நடக்கிறது. எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கான, ஹால் டிக்கெட், www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 'விண்ணப்பதாரர்கள், தங்களின், விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி

புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 

இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால், மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக, புதிய, எளிமையான வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள செய்தி:

வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார்விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.

பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் : பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்

சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். மொழிப்பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. மற்ற பாடங்களின் விபரம்...

இயற்பியல் - 187 
 பேர்வேதியல் - 1123
 பேர்உயிரியல் - 221
 பேர் தாவரவியல் - 22
 பேர்விலங்கியல் - 4 
பேர்கணிதம் - 3,656 
பேர்புள்ளியல் - 68 
பேர்நுண் உயிரியல் - 5 
பேர்கம்யூட்டர் சயின்ஸ் - 1,647 
பேர்வணிகவியல் - 8,301 
பேர்கணக்கு பதிவியல் - 5,597
 பேர்வணிக கணிதம் - 2,551
 பேர்வரலாறு - 336 
பேர்பொருளாதாரம் - 1,717

வழக்கம் போல் மாணவர்களை முந்திய மாணவிகள்

சென்னை : இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி விபரம் :

* மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 92.1 சதவீதம்
* மாணவிகள் எண்ணிக்கை - 477930. இவர்களில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* தேர்வு எழுதிய 415331 மாணவர்களில் 89.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.7 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மாணவர்களை விட மாணவிகள் 5.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* மொத்தமுள்ள 6732 மேல்நிலை பள்ளிகளில் 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
* 292 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

292 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி!

No automatic alt text available.

வெள்ளி, 12 மே, 2017

CPS ல் உள்ளோர் கவனத்திற்கு....


Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: text

H.S.E MARCH 2017 - STATE WIDE SCHOOL WISE PERFORMANCE


மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மே 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியவேலைவாய்ப்பு சேவை மையம் மாற்றுத் திறனாளிகளுக்கு குறுகிய கால பயிற்சி முகாமை நடத்த உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதி பெற்ற தகவல் தொழிநுட்பம், வெளி திறன் பெரும் நிறுவனங்கள் சார்ந்த பார்வைத் திறன், செவித் திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்க்ரீன் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தை 2017 மே 15-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.மே 22, 2017 முதல் பயிற்சி தொடங்கும். 
மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், கிண்டி, சென்னை – 32. தொலைபேசி044 – 22501534 தொடர்பு கொள்ளவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம் !!!



மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம்
1.கன்னியாகுமரி – 94.64.2.
2.திருநெல்வேலி – 93.043.
3.தூத்துக்குடி – 93.054.
4.ராமநாதபுரம் – 95.395.
5. சிவகங்கை – 94.396.
6. விருதுநகர் – 95.977.
7. தேனி – 93.858.
8. மதுரை – 89.379.
9. திண்டுக்கல் – 88.0210.
10.ஊட்டி – 87.4811.
11. திருப்பூர் – 93.8212.
12 கோவை – 91.1013.
13 ஈரோடு – 94.7514.
14 சேலம் – 89.1615.
15 நாமக்கல் – 92.6216.
16 கிருஷ்ணகிரி – 82.6717.
17.தர்மபுரி – 88.7018.
18. புதுக்கோட்டை – 90.5219.
19.கரூர் – 91.6620.
20. அரியலூர் – 83.7821.
21. பெரம்பலூர் – 88.0422.
22.திருச்சி – 92.1923.
23. நாகப்பட்டினம் – 83.4224.
24.திருவாரூர் – 8325.
25. தஞ்சாவூர் – 88.5126.
26. விழுப்புரம் – 82.5827.
27. கடலூர் – 78.1028.
28. திருவண்ணாமலை – 89.3129.
29.வேலூர் – 80.3230.
30. காஞ்சிபுரம் – 81.6931.
31.திருவள்ளூர் – 74.3632.
32.சென்னை – 90.27

பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?



தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.
*#கிரேட் விபரம் :*
*ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171*
*பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283*
*சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806*
*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750*
*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906*
*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849*
*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489*
*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070*
*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938*

விரைவில் 5G ??

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?
4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.
4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!
4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!
1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தடையற்ற தொலைத்தொடர்பு :
தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
இணைய வேகம் :
ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.
பேட்டரி திறன் :
4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.
எப்போது அறிமுகமாகும்?
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.
5G
பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.
வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.
பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப்பதிவு: மீண்டும் தடையை தளர்த்திய உயர்நீதிமன்றம்!

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீ ட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் முன்னரே சில உத்தர வுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது:
அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம்.  ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம்.
மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும்.  அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.
இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

TNPSC GROUP - I RESULTS PUBLISHED

POSTS INCLUDED IN GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS)
Date of   Written Exam : 29.07.2016, 30.07.2016 & 31.07.2016

சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

* சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது  இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
* Rank முறை மாற்றி Grade முறை அமல் படுத்தி உள்ளதற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.
* CBSE பாட  திட்டம் போல் தமிழக பாடத்திட்டமும் மாற்ற கல்வியாளர்கள் ஆலோசணை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது -

தமிழகம், புதுவையில் 92.1 % பேர் தேர்ச்சி தமிழகம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 92.1% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை: 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 அமைச்சர் செங்கோட்டையன் -செய்தியாளர் சந்திப்பு 

 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 15ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 09 நிகழ்வுகள்:

1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால்,

2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல) 

குறிப்பு: இந்தப் பிரச்சினையின் காரணமாக இது வரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஆனல் நினைத்தால், நிராகரிக்க இடம் உண்டு. 
 Image result for reject images

3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால்

4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால்.

5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification).

7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது.

8. தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து விட்டு பின்னர் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருந்தால்.

9. அரசு ஊழியராக இருப்பின், தடையின்மைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால்.

இது தவிர விண்ணப்பம் மற்றும் சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை, மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள். அதனால் பெரிய பாதிப்பு இல்லை.

இவை தவிர வேறு எதனாலும், எந்த பிரச்சினையும் வராது.

கவலையின்றி படியுங்கள்.

வாழ்த்துக்கள்.

கலந்தாய்வு: தம்பி ஐயாசாமி.

+2 RESULT - 2017 ANNOUNCEMENT | WEBSITE LINK,RE TOTALING,ANSWER SCRIPT REGARDING - DGE - DIRECTOR PROCEEDING..



CLICK HERE TO DOWNLOAD - PRESS RELEASE COPY..

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு?


பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:

பகுதி-1 மொழி ரூ.550,
 பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550,
 ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. 

மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.

விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத் துறை அறிவிப்பு: 
தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு, ஜூன், 28ல் துவங்குகிறது. அன்றைய தினம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்திய கல்வி முறை; ஜூன், 30ல், கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்தலும் பாடத்தில் தேர்வுகள் நடக்கும்.
ஜூலை, 3ல், மொழி கற்பித்தல்; 5ல், கணிதம்; 8ல், ஆங்கிலம்; 10ல், அறிவியல்; 12ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன. முதலாம் ஆண்டுக்கு, ஜூன், 29ல், கற்கும் குழந்தை; ஜூலை, 1ல், ஆங்கிலம்; 4ல், கற்றலை எளிதாக்குதல், மேம்படுத்துதல்; 6ல், மொழி கற்பித்தல்; 11ல், கணிதம்; 13ல், அறிவியல் மற்றும், 14ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று (மே-11)அறிவிப்புகள் வெளியானது.
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் வாலட்டுக்கு கட்டணம்
இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி பொது தேர்வுகளில் 'ரேங்கிங்' முறை ரத்து! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை: 'இன்று வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவில், 'ரேங்கிங்' முறை கிடையாது' என, தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை:
மாணவர்களுக்குள் கற்றலில், ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என, ரேங்கிங் முறை அறிமுகமானது. ஆனால், இந்த போட்டி, தற்போது பள்ளிகள் அளவிலான போட்டியாகி , உள்ளது. மாணவர்கள் கடும் நெருக்கடி, அழுத் தத்திற்கு ஆளாகின்றனர். முதல் மாணவர்களை பாராட் டும் போது, இடை மற்றும் கடைசி மாணவர்கள், தாழ்வு மனப்பான் மைக்கும், 

புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர். இதில், தாக்குப் பிடிக்க முடியாத பல மாணவர் கள், மன இறுக்கம், சோர்வுக்கு ஆளாகின் றனர்.கற்றல் என்பது அறிதல், புரிதல்பயன்படுத்துதல், வினவு தல், புதியன படைத்தல் என, அழகிய செயல்பாடா கும். இதில், எழுத்துப்பூர்வ மதிப்பெண் மட்டுமே, அதிக முக்கியத்துவம் பெற்று, ஒரு சில மாணவர் களை போற்றும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, சி.பி.எஸ்.இ., போன்ற பிற கல்வி வாரியங் கள், ஆரோக்கியம் இல்லாத இந்த போட்டி சூழலை தவிர்க்க,ரேங்கிங் எனப்படும், தேசிய, மாநில முதன்மை நிலைகளை தவிர்த்து விட்டது.

அதன்படி, தமிழக கல்வித் துறையின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்தது; பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு சிலரை மட்டும் மாபெரும் வெற்றி யாளர்களாகக் கருதும் தரப் பட்டியல் முறையை, நடப்பு ஆண்டு முதல் கைவிட முடிவானது. அதற்கு பதில், தனித் திட்டத்தை வடிவமைக்க, கருத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, தரவரிசை முறையை கைவிட, அரசு தேர்வு மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பிற தனித்திறன் மாணவர் களை ஊக்குவிக்க, தனித் திட்டம் கொண்டு

வரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் வழிக்கு உதவித்தொகை!

பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இந்த முறை பின் பற்றப்படுகிறது. ரேங்கிங் வரும் போது, மாணவர்களிடையே, ஒரு மதிப்பெண் குறைந்தாலும், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, ரேங்க் முறை கைவிடப்படு கிறது. தமிழ் வழியில், சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். 

பெற்றோர், தங்கள் குழந்தை முதலிடம் பெறவில்லை என்ற ஏக்கத்தை தீர்க்கவும், எதிர்காலத்தில், தமிழக மாணவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற தனித்திறன் அடிப்படையில், சிறந்த மாண வர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப் படும். பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, உயர்மட்டக் குழு ஆலோ சித்து வருகி றது. இது குறித்து, முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் சில கருத்துக் களை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' : 10 நிமிடங்களில் பார்க்கலாம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்கும். 

தமிழகம் முழுவதும், 8.98 மாணவ, மாணவியர் உட்பட, 9.34 லட்சம் பேர் எழுதிய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை, 10:00 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், இலவசமாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மாணவரின் பதிவு எண், பிறந்த தேதியை, மாதம், ஆண்டுடன் பதிவு செய்தால், மதிப்பெண் கிடைக்கும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 15 முதல் பதிவிறக்கம் செய்யலாம்; 17 முதல், தாங்கள் படித்த பள்ளியில், தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறுகிறது. விடைத்தாளை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும், இன்று முதல், 15 வரை விண்ணப்பிக்கலாம்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பம் பெறப்படாது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குஉரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வில் மதிப்பெண் குறைவா? - '104'ல் ஆலோசனை பெறுங்கள்! : பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் பிரச்னை ஏற்பட்டால், மாணவர்களும், பெற்றோரும் மன அழுத்தத்தை குறைத்து தெளிவுபெற, '104' எண்ணை தொடர்பு கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு, இன்று காலை வெளியாகிறது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், மொபைல்போன் எண்ணில், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட உள்ளது. மதிப்பெண் குறைவான மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள், மன அழுத்தத்தில் சிக்கி, விபரீத முடிவுகளை எடுப்பது தொடர்கிறது.

PLUS TWO MARCH 2017 | PUBLIC EXAMINATION RESULT