பள்ளி பொது தேர்வுகளில் 'ரேங்கிங்' முறை ரத்து! தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: 'இன்று வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவில், 'ரேங்கிங்' முறை கிடையாது' என, தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை:
மாணவர்களுக்குள் கற்றலில், ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என, ரேங்கிங் முறை அறிமுகமானது. ஆனால், இந்த போட்டி, தற்போது பள்ளிகள் அளவிலான போட்டியாகி , உள்ளது. மாணவர்கள் கடும் நெருக்கடி, அழுத் தத்திற்கு ஆளாகின்றனர். முதல் மாணவர்களை பாராட் டும் போது, இடை மற்றும் கடைசி மாணவர்கள், தாழ்வு மனப்பான் மைக்கும்,
புறக்கணிப்புக்கும் ஆளாகின்றனர். இதில், தாக்குப் பிடிக்க முடியாத பல மாணவர் கள், மன இறுக்கம், சோர்வுக்கு ஆளாகின் றனர்.கற்றல் என்பது அறிதல், புரிதல்பயன்படுத்துதல், வினவு தல், புதியன படைத்தல் என, அழகிய செயல்பாடா கும். இதில், எழுத்துப்பூர்வ மதிப்பெண் மட்டுமே, அதிக முக்கியத்துவம் பெற்று, ஒரு சில மாணவர் களை போற்றும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே, சி.பி.எஸ்.இ., போன்ற பிற கல்வி வாரியங் கள், ஆரோக்கியம் இல்லாத இந்த போட்டி சூழலை தவிர்க்க,ரேங்கிங் எனப்படும், தேசிய, மாநில முதன்மை நிலைகளை தவிர்த்து விட்டது.
அதன்படி, தமிழக கல்வித் துறையின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்தது; பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு சிலரை மட்டும் மாபெரும் வெற்றி யாளர்களாகக் கருதும் தரப் பட்டியல் முறையை, நடப்பு ஆண்டு முதல் கைவிட முடிவானது. அதற்கு பதில், தனித் திட்டத்தை வடிவமைக்க, கருத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, தரவரிசை முறையை கைவிட, அரசு தேர்வு மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. பிற தனித்திறன் மாணவர் களை ஊக்குவிக்க, தனித் திட்டம் கொண்டு
வரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் வழிக்கு உதவித்தொகை!
பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இந்த முறை பின் பற்றப்படுகிறது. ரேங்கிங் வரும் போது, மாணவர்களிடையே, ஒரு மதிப்பெண் குறைந்தாலும், மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, ரேங்க் முறை கைவிடப்படு கிறது. தமிழ் வழியில், சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர், தங்கள் குழந்தை முதலிடம் பெறவில்லை என்ற ஏக்கத்தை தீர்க்கவும், எதிர்காலத்தில், தமிழக மாணவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற தனித்திறன் அடிப்படையில், சிறந்த மாண வர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப் படும். பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, உயர்மட்டக் குழு ஆலோ சித்து வருகி றது. இது குறித்து, முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் சில கருத்துக் களை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.