'பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி
புதுடில்லி: வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால், மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக, புதிய, எளிமையான வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள செய்தி:
வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார்விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.
பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.