967 பேருக்கு பி.ஆர்க்., 'சீட்': அண்ணா பல்கலை அனுமதி....
தமிழக அரசின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ௯௬௭ பேருக்கு பி.ஆர்க்., எனப்படும், கட்டட வரைகலை படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலையில் இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் 'நாட்டா' எனப்படும் தேசிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மாணவர்கள் பங்கேற்க முடியும்.தமிழகத்தில் ௩,௦௪௩ பி.ஆர்க்., இடங்களுக்கு, ௨,௦௦௯ பேர் மட்டுமே, நாட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றனர். எனவே, ௧,௦௦௦ இடங்கள் வரை காலியாகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாட்டாவுக்குஇணையாக தமிழகத்தில் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மட்டும் நடத்தப்பட்டது; இதில் ௧,௧௨௨ பேர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தத்திற்கு பின் ௯௬௭ பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அந்த ௯௬௭ பேருக்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வழங்கலாம் என, அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது. அதனால் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில் காலியிடம் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.