அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு???
வேலைவாய்ப்பின்மை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள்
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தான் அதிகளவில் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் 4,29,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 6.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. ஹரியானா மாநிலத்தில் 3,28,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 4.7 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,800,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 7.4 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது. அதேபோல உத்திரகாண்ட் மாநிலத்தில் 2,00,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். அங்கு 7.0 சதவிகிதம் வேலையின்மை நிலவுகிறது.
இந்தியாவில் மாதந்தோறும் மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. குறைந்த அளவில் தான் தொழில்கள் தொடங்கப்படுகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசுகள் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 50 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டு வருகின்றன. ஹரியானா, பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து குறைக்க திட்டமிட்டுள்ளன. உத்திரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராமசாமி அரசின் எல்லாத் துறைகளிலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் செயல்திறன் குறித்த அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதாலாக பணி வழங்க முடியும் என்று மாநில அரசுகள் கருதுகின்றன.
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. மாநில அரசைப் போல மத்திய அரசும் வேலையின்மையைப் போக்குவதில் சரிவையே கண்டு வருகிறது. பாரதிய ஜனதா பொறுப்பேற்பதற்கு முன்பு வேலையின்மை 3.8 சதவிகிதமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.