இக்னோவில் படிக்க கூடுதல் அவகாசம்
சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம்.
படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை : இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.