தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?
தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?
இந்திய பார் கவுன்சில் சட்டப் படிப்புக்கான விதிகளை இயற்றியுள்ளது. அந்த விதிகளின் விதி 5 ல் 3 ஆண்டுகள் சட்டப் படிப்பு மற்றும் 5 ஆண்டுகள் சட்டப் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான தகுதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளது.
அந்த விதியின் படி 5 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதியாக 10,12 வகுப்புகள் முடித்திருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. ஒரு மாணவர் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையும், அதன்பின்னர் 12 ம் வகுப்பையும் முடித்திருந்த அந்த மாணவரின் வயது நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு உட்பட்டிருந்தால், 5 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவார். 3 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு ஒருவர் 10 மற்றும் 12 மற்றும் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்திய பார் கவுன்சிலால் உருவாக்கப்பட்டுள்ள விதி 5 ல் 12 ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது முதல் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை தொலைதூர கல்வியில் பெற்றிருந்தால் அவர்களை 5 ஆண்டுகள் சட்டப் படிப்பு அல்லது 3 ஆண்டுகள் சட்டப் படிப்பில் சேருவதற்கு தகுதியுடையவர்களாக கருதலாமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர கல்வி முறையில் 10, 12 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையும் சட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ள தடை ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
W. P. NOs - 34630,34220,32799,33108/2016
Dt - 21.10.2016
W. P. NO - 34630/2016
S. தீர்த்தகிரி Vs பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பலர்
(2016-8-MLJ-456)
(2017-1-CTC-160)
(2017-1-CTC-160)