ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு...
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
டேட்டா ஆஃபர்கள் வழங்குவதில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஜியோ, தற்போதும் அதே யுக்தியைத்தான் கொண்டுள்ளது.
ப்ரீபெய்ட் திட்டத்தில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், தற்போது புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.19 முதல் ரூ.9,999 வரை பல ரீசார்ஜ் வாய்ப்புகள் உள்ளன. இதில் எந்த ஒரு ரீசார்ஜையும் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சில முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் கால அளவு மட்டும் இரண்டு மடங்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.349 மற்றும் ரூ.399 ஆகிய இரண்டு ரீசார்ஜ்க்கும், ஏற்கனவே இருக்கும் ரூ.309 மற்றும் ரூ.509க்கும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரூ.309 ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசம். அதே சமயம், அதற்கான வாலிடிட்டி 28 நாட்களுக்கு பதிலாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல, ரூ.509 ரீசார்ஜ் செய்தால், அதற்கான வாலிடிட்டியும் 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபிக்கள் இலவசமாக வழங்கப்படும்.
அதே போல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில், 56 நாட்களுக்கு தினமும் டேட்டா வழங்கப்படுவதற்கு பதிலாக, 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும்.
அதே சமயம், ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும், இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள்.
போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.349 மற்றும் 399 திட்டங்கள் உள்ளன. ரூ.349 திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும். அதே போல ரூ.399 திட்டத்தில் அளவில்லா 4ஜி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.