பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் முறை: சாதக பாதகங்கள் என்னென்ன? ஓர் அலசல்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மாறுபட்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மாறுபட்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.
தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளின் தேவை குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆசிரியர்களிடமும் கல்வியாளர் ச.மாடசாமியிடமும் பேசினோம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க 60 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கற்பிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மாறுபட்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.
தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளின் தேவை குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் ஆசிரியர்களிடமும் கல்வியாளர் ச.மாடசாமியிடமும் பேசினோம்.
பள்ளிக்கல்விக்கான வல்லுநர் குழு குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து என்ன?
ஶ்ரீ.திலீப், அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியங்கம், விழுப்புரம்:
ஶ்ரீ.திலீப், அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியங்கம், விழுப்புரம்:
ஸ்மார்ட் வகுப்புகள் மூலம், கல்வி மீதான ஆர்வம் மாணவர்களுக்கு இன்னும் அதிகமாகும். முதலாம் வகுப்பிலிருந்தே இதன் மூலம் கற்பிக்கலாம். படங்களைக் காட்டி, அவற்றின் பெயர்களைக் கூறச் செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் வீடியோக்களைப் பார்க்கச் செய்தல் எனப் பல்வேறு வகைகளில் ஸ்மார்ட் வகுப்பறை பயன்படும். வழக்கமான முறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களையும் ஈர்க்க முடியாமல் போய்விடக்கூடும். ஆனால், திரை வழியே கற்பிக்கும்போது அது சாத்தியமாகும். அதே நேரத்தில், திரையில் படங்கள் காட்டப்படுவதற்கு, இருட்டான சூழல் வேண்டும் என்பதால் மூடப்பட்ட வகுப்பறைகளாக மாறும் நிலை உருவாகும். நாள் முழுவதும் அப்படி இருந்தால் ஆரோக்கியமானதல்ல. அதனால், நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் ஸ்மார்ட் வகுப்பு நடந்தால் போதுமானது.
செ.மணிமாறன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல ராதா நல்லூர், திருவாரூர்.
ஸ்மார்ட் வகுப்பறைகளின் தேவை ஆறாம் வகுப்பிலிருந்துதான் தொடங்குகிறது. ஏனெனில், தொடக்கப் பள்ளியின் வகுப்புகளுக்கான பாடங்களில் பெரும்பாலும் நாம் நேரில் பார்த்துவிடுகிற பொருள்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். அதனால், அவற்றை நேரில் காட்டியே பாடம் நடத்தலாம். உதாரணமாக... பந்து, பட்டம், குடிசை வீடு. தேவைப்பட்டால் உச்சரிப்புக்கென 'ஆடியோ சிஸ்டம் மட்டும் இருந்தால் போதும். ஆறாம் வகுப்புக்கு மேல்தான் கோள்கள், ஒளிச்சேர்க்கை போன்று, மாணவர்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டமுடியாதவை பாடங்கள் வரும். அவற்றைப் பற்றிய பாடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நல்லதே. ஸ்மார்ட் வகுப்புகள் நடைமுறைப்படுத்தும்போது மாணவர்களின் உடல்நலப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பா. ப்ரீத்தி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சீர்ப்பனந்தல், சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டம்
ஒரு வகுப்பறையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குக் கற்பிக்க ஸ்மார்ட் வகுப்பு முறை எளிமையானதாக இருக்கும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளுக்கு மிகவும் உதவும். ஓர் எழுத்தை எழுத எங்கிருந்து ஆரம்பித்து, எங்கு முடிக்க வேண்டும் என்பதை திரை வழியே சுலபமாகக் கற்றுகொடுக்கலாம்.
கரும்பலகையைச் சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியர் எனில், எழுதிகொண்டிருக்கும்போது அவரின் உருவம் வகுப்பின் சில மாணவர்களுக்குக் கரும்பலகையை மறைத்துகொண்டிருப்பதை உணர மாட்டார். இதுபோன்ற சிக்கல்களுக்குத் திரை வழியே பயிற்றுவிப்பது நல்ல மாற்றாக அமையும்.
ச.மாடசாமி, கல்வியாளர்.
ஸ்மார்ட் கிளாஸ் முறை நிச்சயம் வகுப்பறையையில் ஒரு மலர்ச்சியைக் கொண்டுவரும். வழக்கமான கற்பித்தல் முறையை இது புதுப்பிக்கிறது. ஆசிரியர்களுக்கு இந்த முறை கூடுதலான சக்தியை அளிக்கிறது. தனியார் பள்ளிகளில் இந்த உத்தி வணிக நோக்கத்தில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் அவ்விதமாக இருக்காது. ஊட்டி மலர்க் கண்காட்சி பற்றிய பாடத்துக்கு ஆசிரியர் ஒருவர் அந்தக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட வீடியோவைத் திரையிட்டுக் காட்டியுள்ளார். வார்த்தைகளால் விளக்குவதை விட, மேலான புரிதலை இது நிச்சயம் அளித்திருக்கும். வெறும் பிரமிப்புக்காக இந்த முறையைப் பிரயோகிக்காமல், மாணவர்களால் காணவே முடியாத எரிமலை, சுனாமி, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை விளக்குவதற்கும் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.
வகுப்பறையில் ஆசிரியர், மாணவர் எனும் இருவருக்கும் இடையே 'ஸ்மார்ட்' திரை நுழைந்திருக்கிறது. அதன் சாதகங்களைக் கொண்டு கற்பித்தலை எளிமையாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.