P.F., வட்டி 8.65 சதவீதம் : மத்திய அரசு ஒப்புதல்.
இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு, 2016 - 17ம் ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, அறங்காவலர் குழு முடிவு செய்யும்.
அறங்காவலர் குழு முடிவிற்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எப்., அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை, மத்திய அரசு, அப்படியே ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், 2015- - 16-ம் நிதி ஆண்டில், பி.எப்.,கான வட்டி விகிதத்தை, 8.8 சதவீதமாக, அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சகம், இதை, 8.7 சதவீதமாகக் குறைத்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வட்டிவிகிதம், 8.8 சதவீதமாக மீண்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்றபடி, பி.எப்., வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதிஅமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், பி.எப்., அறங்காவலர்கள் குழு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடந்தது. இதில், 2016 - -17ம் நிதி ஆண்டுக்கான, பி.எப்., வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய, பரிந்துரைக்கப்பட்டது.அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறுகையில், '2016 - 17ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி சதவீதத்தை, 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யமத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்' என்றார்.
இந்நிலையில், பி.எப்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2016 - 17ம் ஆண்டுக்கான, பி.எப்., வட்டி சதவீதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த உத்தரவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நான்கு கோடி சந்தாதாரர்களின் கணக்கில், வட்டித் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறியுள்ளது.