மாணவர்கள் குறைகளை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
மாணவர்கள் தங்களது குறைகளையும் பிரச்சினை களையும் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளி களிலும் மாணவ, மாணவிகள்தங்கள் குறைகள், நிறைகள் மற்றும் பிரச்சினைகளைத் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பள்ளி ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளும் இணை இயக்குநர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ள விவரத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.