பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது எல்காட் நிறுவனம்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-12, 12-13ம்ஆண்டு களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கலை, அறிவியல் கல் லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து 2013-14 நிதியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து 2013-14 நிதியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பில், 2011 முதல் 2016 வரை 33 லட்சம் மடிக்கணினிகள் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதற்காக 5 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணியில் எல்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.முதல்கட்டமாக இதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறு வனம் கோரியுள்ளது. தகுதி யான நிறுவனங்கள் தரும் மடிக்கணினிகள் அரசு வகுத்துள்ள வரம்புக்குள் இருக்கும்பட்சத்தில், அவை கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.