மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் மிக முக்கிய அம்சங்கள் !!
1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள் தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.
4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.
5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.
6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.
8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.
9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.
10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.
11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும்.
12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.
13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.
14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.
17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும்.
18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.
19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.
20. ஆசிரியர்களைக் கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.
22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.
23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.