சனி, 28 ஏப்ரல், 2018
சிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி...
இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.
இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 12 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டவர்கள், பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 2017, அக்., 28ல் பிரதான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ஏப்., வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகளை, யு.பி.எஸ்.சி., என்ற, அகில இந்திய குடிமை பணிகள் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில், ஐதராபாத் இளைஞர் துரிஷெட்டி அனுதீப், முதல் இடம் பெற்று உள்ளார்.தமிழகத்தில், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற, 15 மாணவியர் உட்பட, 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், தர்மபுரி டாக்டர் கீர்த்தி வாசன், அகில இந்திய அளவில், 29ம் இடமும், சென்னை மதுபாலன், 71ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் பல மையங்களில் பயிற்சி பெற்ற பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து, 70க்கும் மேற்பட்டவர்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு...
சென்னை: பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.
ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்; அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கைக்கு அவகாசம்..
சென்னை: சென்னை பல்கலையில், தொலைநிலை கல்விக்கு விண்ணப்பிக்க, மே, 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பட்டப்படிப்பு, முதுநிலை, தொழிற்கல்வி உள்ளிட்டவற்றில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே, 31 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம், சனி, ஞாயிற்று கிழமைகளிலும், இயங்கும். விருப்பம் உள்ளோர், பல்கலையின்,www.ideunom.ac.inமற்றும்www.unom.ac.inஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வில்லங்கச் சான்றை திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்............
பிழையாக தட்டச்சு செய்யப்பட்ட வில்லங்கச் சான்றைத் திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பொது மக்களுக்கு வில்லங்கச் சான்று வழங்கப்பட்டு வருகின்றன. சார் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதில் இருந்து வில்லங்கச் சான்று கணினி வழியாக அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இணையதளம் வழியாக வில்லங்கச் சான்றினை கட்டணமின்றிப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 20,000 பேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள். கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரையுள்ள வில்லங்கச் சான்றுகளை இணையதளம் (tnreginet.gov.in) வழியாக பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
தவறு இருந்தால்...இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வில்லங்கச் சான்றிலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட சான்றிலும் பெயர், சொத்து விவரம் போன்றவற்றில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனைச் சரி செய்யலாம். அசல் ஆவணங்களில் விவரங்கள் சரியாக இருந்து, வில்லங்கச் சான்றிதழ் தவறுகள் இருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்யலாம். இந்த மனுவை ஆராய்ந்து அதுகுறித்து சரியான விவரங்களை கணினியில் பதிவு செய்து மாவட்ட பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன் கணினியில் உள்ள விவரங்கள் சரிசெய்யப்படும். இது வில்லங்கச் சான்றிலும் எதிரொலிக்கும். இதன்பின், சரியான சான்றை பதிவிறக்கம் செய்யலாம்.
விரைவில் தொடக்கம்: வில்லங்கச் சான்று தவறுகளை சரி செய்யும் பணியை வீட்டில் இருந்தே இணையதளம் வழியாக மேற்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
மேலும், பொது மக்கள் பதிவு செய்த அசல் ஆவணத்திலேயே விவரங்கள் தவறாக எழுதப்பட்டிருந்தால் அதனைச் சரி செய்ய ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும் சேர்ந்து பிழை திருத்தல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். உரிய விசாரணைக்குப் பிறகு பதிவில் உள்ள தவறுகள் சரி செய்யப்படும் என்று தனது அறிவிப்பில் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 27 ஏப்ரல், 2018
பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு...
பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு...
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளன. பொது தேர்வுகளின் விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. மே, மூன்றாவது வாரம் முதல், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஜூன், 1ல், புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்க உள்ளன. அதற்கு முன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்கட்டமைப்புகளை சோதனையிட, பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை, அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளதா என, சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்கள் பள்ளி வளாகத்திற்கு சென்று, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.சான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை...
'பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பெயர் விபரங்களில், பிழைகள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'
என, தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பொது தேர்வுகளை, அரசு தேர்வுத்துறை நடத்தி முடித்துள்ளது. தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் வரை, மாணவர்களின் பெயர் விபரங்களில் தவறுகள் இருந்தால், அவற்றை திருத்த, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், 2017 பொது தேர்வு முடிந்து, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, பல மாணவர்களுக்கு, பெயர், பெற்றோர் பெயர், இனிஷியலில் பிழைகள் இருந்தன.இதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டன. பிழைகளை திருத்தி, மீண்டும் புதிய சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த ஆண்டு, இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க, மாணவர் விபரங்களில் பிழைகளை திருத்த, தேர்வு முடிந்த பிறகும், கூடுதல் அவகாசத்தை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதன்படி, பிழைகளை திருத்துவதற்கான மனு அளிக்க, இன்று கடைசி நாள்.'இந்த கூடுதல் அவகாசத்திற்கு பின்னரும், தேர்வு முடிவுகள் வந்ததும், மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் பிழைகள் இருப்பதாக, தேர்வுத் துறைக்கு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதிக்கப்படும். 'மேலும், துறை ரீதியாக, தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை எச்சரித்துள்ளது."3 ஆயிரம் பள்ளிகளில் மிடுக்கு வகுப்பறைகள்'...
தமிழகத்தில் 2018-2019 கல்வி ஆண்டு முதல் 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகள் "மிடுக்கு வகுப்பறை'களாக (ஸ்மார்ட் கிளாஸ்) மாற்றப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 390 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இம்முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
2018-19 கல்வி ஆண்டு முதல் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகள் மிடுக்கு வகுப்பறைகளாக மாற்றப்படும். அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில், ரூ. 463 கோடி செலவில் இணையதளம் மூலம் கல்வி கற்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை சில ஆசிரியர் சங்கங்கள் புறக்கணித்தாலும், அரசு அறிவித்தப்படி குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்துள்ள மாணவர்களின் முயற்சி, வெற்றியாகவும் மாற வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், எம்எல்ஏ வெ.ப.பா.பரமசிவம், முன்னாள் மேயர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர். ஆண்ட்ராய்டு பயனாளிகள் பிற பிளேயர்ஸ்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கூகுள் தற்போது எவ்வித கட்டணமும் இன்றி இந்த பிளேயரை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே மியூசிக் அளவிற்கு உள்ள இந்த பிளேயரை நீங்கள் எந்த செயலியின் உதவியின்றி கூகுள் சியர்ச் மூலமே பயன்படுத்தலாம் என்பது சிறப்பு தகவல்.
கூகுள் நிறுவனம் இந்த பாட்காஸ்ட் நிறுவனமான பசிபிக் குறித்த தகவல்களையும் சியர்ச் ரிசல்ட்டில் அளித்துள்ளது. இந்த சியர்ச் தகவல் மூலம் இந்த பாட்காஸ்ட் ஆண்ட்ராய்டு பயனாளிக்கு மிகுந்த பயனளிக்கின்றது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியை அறிமுகம் செய்த முதல் நாளிலேயே சியர்ச் மூலம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. எனவேதான் இந்த வசதியை நாங்கள் ஆண்ட்ராய்டு பயனாளிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று கூகுள் பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகள் தற்போது கூகுள் சியர்ச் என்ற வசதியின் மூலம் மிக எளிதாக இந்த பாட்காஸ்ட் பிளேயரை அடைய முடியும். நீங்கள் ஒரு ஷோ பெயரை டைப் செய்தால் முதலிடத்தில் பாட்காஸ்ட் உங்களுக்கு தெரியும். அதன் மூலம் நீங்கள் லேட்டஸ்ட் பகுதியினை கேட்க முடியும். மேலும் இதன் ஷார்ட்கட் வடிவமும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
மேலும் இந்த பாட்காஸ்ட் பிளேயரை நீங்கள் கூகுள் ஹோமில், கூகுள் அசிஸ்டெண்ட் மூலமும் பெற முடியும். ஒரே ஒருமுறை ஓகே கூகுள் என்று கூறி பாட்காஸ்ட் பெயரை மட்டும் நீங்கள் குரலில் கூறினால் போதும், உடனே உங்களின் விருப்பத்திற்குரிய இசையை உங்களால் கேட்க முடியும்,. மேலும் நீங்கள் எந்த இடத்தில் விட்டு சென்றீர்களோ மீண்டும் அந்த இடத்தில் இருந்து நீங்கள் விட்டதை கேட்கும் வசதிஊம் உண்டு.
ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் டிவைசில் பாட்காஸ்ட் வசதியை அளித்தது என்றாலும், அது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. பெரும்பாலான ஐபோன் பயனாளிகள் இந்த பாட்காஸ்ட் மூலம் இசையை கேட்கின்றார்கள் என்றாலும் இனிவரும் காலத்தில் ஆண்ட்ராய்ட் பயனாளிகளும் அதற்கு இணையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாட்காஸ்ட் புரடொக்சன் மேனேஜர் ரெனுவ் வெடன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்..
தமிழக அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் 69 சதவீதத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்கு 61 சதவீதம் செலவிடப்படுகிறது. இதை சிந்தித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:
அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் 69 சதவீதத்தில், 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்துக்காக 61 சதவீதம் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளையில் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, மாநில மொத்த வருவாயில் 61 சதவீத நிதியை செலவிடுகிறோம். மீதியுள்ள 8 சதவீத நிதியை வைத்து 7.87 கோடி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், கடனுக்கான வட்டியையும் செலுத்தியும் வருகிறோம். எனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, சிந்தித்து செயல்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் இதை புரிந்து கொண்டு தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எளிதாக பட்டா மாறுதல்: சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறும்போது, அங்கேயே பட்டா மாறுதலை பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுடன் இணைந்து செயல்படும். தனிப்பட்டா உடனே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பத்திரப் பதிவுகள் நடைபெறுகிறது என்றால், அவர்கள் மிக எளிதாக பட்டா மாறுதலை பெற முடியும்.
உயர்கல்வித் துறையில் புரட்சி: தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் புரட்சி நடைபெற்றுள்ளது. 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் 21 சதவீதமாக இருந்த உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அரசின் திட்டங்களால், தற்போது 46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: வறட்சிக் காலத்தில் கூட விலைவாசி உயராமல், குடிநீர் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டோம். குடிமராமத்துத் திட்டத்தில் ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டன. மேலும் 1,600 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.331 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் உயர ஓடைகளில் தடுப்பணை கட்ட மூன்றாண்டு காலத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.350 கோடி நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன என்றார் முதல்வர்.
வியாழன், 26 ஏப்ரல், 2018
AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில்நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம், உடை உணவுஎன அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 2104-2015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு, உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார்.இதையடுத்து, மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிம்னறம், பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது. இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு, சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2014-15ம் ஆண்டுக்கான உணவு, புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
'குரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 1 ஏ பிரிவில் அடங்கிய, உதவி வன பாதுகாவலர் பதவியில், 14 இடங்களுக்கு, முதல்நிலை எழுத்து தேர்வு, 2017 டிச., 17ல் நடத்தப்பட்டது. இதில், 10 ஆயிரத்து, 459 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில், முதன்மை எழுத்து தேர்வுக்கு, 472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை, 28 முதல் ஆக., 4 வரை, சென்னையில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பள்ளிக்கூட புத்தகங்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை கூடாது...
புதுடில்லி: டில்லியில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்கள் புத்தகங்களுக்கு, 'பிளாஸ்டிக்' தாள்கள் பயன்படுத்தி, அட்டை போடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சுற்றுச்சூழல் மாசடைவதை மனதில் வைத்து, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த, டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தடை விதித்தது.இதையடுத்து, பள்ளி மாணவர்கள், தங்கள் புத்தகங்களுக்கு, பிளாஸ்டிக் தாள்களால் ஆன அட்டைகளை பயன்படுத்த, தடை விதிக்கும்படி, சுற்றுச்சூழல் அமைச்சகம், கல்வித்துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை தொடர்ந்து, பிளாஸ்டிக் அட்டை பயன்படுத்த தடை விதிக்கும்படி, டில்லியில் உள்ள அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது
சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் பாடத்துக்கு, மார்ச், 26ல், பொது தேர்வு நடந்தது.
தேர்வுக்கு முதல் நாளில், தேர்வின் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், வினாத்தாள், லீக் ஆனது உறுதியானது. இதுகுறித்து, புதுடில்லி சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில், பொருளியல் பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதன்படி, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றனர்.'மார்ச், 26ல் நடந்த தேர்வின் வினாத்தாளை விட, மறு தேர்வில், கேள்விகள் எளிதாக இருந்தது' என, மாணவர்கள் தெரிவித்தனர்.விடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் முடிந்து, 10ம் வகுப்புக்கு, நேற்று முன்தினம் விடைத்தாள் திருத்தம் துவங்கியது. இதில், சில இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தம் செய்யாமல், புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும் தேதியை, அரசு அறிவித்துள்ள நாளில், வெளியிட வேண்டும்.
இதை புரிந்து கொள்ளாமல், ஆசிரியர்கள் சிலர், சங்கங்களின் பெயரில், புறக்கணிப்பு போராட்டம், வாயில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிகிறது. இதனால், விடைத்தாள் திருத்தம் பாதிக்கப்படும்.அரசின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, விடைத்தாள் திருத்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். விடைத்தாள் திருத்த பணிக்கு வராதவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, முகாம் அதிகாரிகள் அனுப்ப வேண்டும். விடைத்தாள் திருத்தம் சரியாக நடத்தப்படாத முகாம்களின் அதிகாரிகளின் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் மனநல கவுன்சலிங்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாணவர்களின் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் மனநல கவுன்சலிங் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை செனாய்நகர் மாநகராட்சி பெண்கள்மேல் நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கனகராஜ். இவர் மாணவிகளை கேவலமாக திட்டியதாக மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் கடந்த 2009 ஜூலையில் புகார் கொடுத்தனர்.
இவர் கொடுத்த பதிலை பள்ளி கல்வித்துறைஏற்கவில்லை. அவருக்கு 3 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வை நிறுத்தி உத்தரவிட்டது.இதை எதிர்த்து கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த உறவு இப்போது இல்லை. இதனால் பல்வேறு துயர சம்பவங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட 6ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் தரவேண்டும். . இந்த கவுன்சலிங் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் மனநலம் தொடர்பான ஆய்வுகள், தீர்வுகள் ஆகியவை குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் தர நிபுணர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
*தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்*
🌟தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்.தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்
🌟அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
🌟முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
🌟இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.
🌟எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
🌟அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
🌟முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
🌟இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.
🌟எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி டெட் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 4 வது நாளாக சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் 16 பேர் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய கட்டிடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம வேலை சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கக்கதில் உள்ள அரசு பள்ளியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணமாக இதுவரை சுமார் 110க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.அரசு தரப்பில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கபட்டது..
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் 16 பேர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அளிக்கும் பரிந்துறையை முதல்வரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் மேலும் அதன் அடிப்படையில் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்று கொண்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பேட்டி
செங்கோடையன்
பள்ளி கல்வி துறை அமைச்சர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் ஒருங்கினைப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதாகவும் ஒரு நபர் கமிஷ்னை ஒரு வாரத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்..
மேலும் அமைச்சர் அளித்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்றுகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி
ராபர்ட்
இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
சம வேலை சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கக்கதில் உள்ள அரசு பள்ளியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , தொடர் உண்ணாவிரத போராட்டம் காரணமாக இதுவரை சுமார் 110க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.அரசு தரப்பில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கபட்டது..
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் 16 பேர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அளிக்கும் பரிந்துறையை முதல்வரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் மேலும் அதன் அடிப்படையில் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்று கொண்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பேட்டி
செங்கோடையன்
பள்ளி கல்வி துறை அமைச்சர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் ஒருங்கினைப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதாகவும் ஒரு நபர் கமிஷ்னை ஒரு வாரத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்..
மேலும் அமைச்சர் அளித்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்றுகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பேட்டி
ராபர்ட்
இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)