வாக்குப்பதிவு துவங்கும் முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முத்திரை இடும் பணியினை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Result section ல் Green paper seal வைத்த பின்னர்  Outer cover பகுதியினை முழுவதுமாக பாதுகாக்கும் பொருட்டு Special seal மற்றும் Strip seal கொண்டு  வைக்கும் பணியினை இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

Outer cover ன் பகுதியில் Close button இருக்கும். பகுதியினை திறப்பாக வைத்து. SPL seal வைக்கப்படும்.

result section inner cover ல் உள்ள துளையில் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்ட நூலினை நுழைத்து அதில் special seal ஐ பொறுத்தி  அதில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும்.

அரக்கு முத்திரை வைக்கும் முன்பாக special seal ல் Control unit ன் வரிசை எண்ணை குறித்தும் அதன் பின்புறம் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையொப்பம் இட்டு முகவர்களின் ஒப்பத்தினையும் பெற வேண்டும்.

special tag ல் உள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தாமும் குறித்துக்கொண்டு சத்தமாக வாசித்து முகவர்களையும் குறித்துக்கொள்ள தெரிவிக்கவும்.

பின்னர் special tagஐ வாக்குப்பதிவு எந்திரத்தின் close பொத்தானுக்கு இடையுறு இல்லாமல் பொறுத்து outer cover ஐ மூடி அதனையும் நூல் கொண்டு  address tagஐ வாக்குச்சாவடி விபரங்களை பூர்த்தி செய்து இணைத்து அரக்கு முத்திரை இடவும்.

சேதமடைந்த Special tag னை எந்த காரணத்தினை கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
அடுத்த படியாக Result section inner cover ல் இணைத்திருக்கும் Green paper seal ஐ strip seal உடன் இணைக்கும் பணி.

Strip seal, 1 inch அகலமும் 23.5" நீளமும் A,B,C,D என ஏற்கனவே பசையிடப்பட்ட நான்கு பகுதிகளையினை கொண்டிருக்கும்.

இதற்கென உள்ள வரிசை எண்ணை நீங்களும் குறித்துக்கொண்டு முகவர்களுக்கும் சொல்லுங்கள்..

strip seal ன் A என்ற பகுதியினை ஏற்கனவே inner cover ல் வைத்துள்ள green paper seal க்கு மேல் பகுதியில் Close பட்டனுக்கான ரப்பர் உறைக்கு கீழாகவும் வைத்து green paper seal கீழ் முனையினை Strip sealன் A. என்ன பகுதியில் ஒட்டவும்.

பின்னர் strip seal ன் B என்ற பகுதியினை மடித்து A பகுதியின் மீது வைக்கப்பட்ட green paper seal மீது ஒட்டவும்.

green paper seal ன் outer cover ல் மேல் இருக்கும் பகுதியினை எடுத்து இப்போது Strip seal ன் C என்ற பகுதி மீது ஒட்டவும்.

இப்போது strip seal னை Control unitனை சுற்றி close பட்டனுக்கு கீழாக சுற்றி D என்ற பகுதியினை Green paper seal ன் மடித்து வைக்கப்பட்ட பகுதி மீது ஒட்டிவிடவும்.

வாசிக்கும் போது குழப்பமாக இருக்கும் இம்முறையினை பயிற்சி வகுப்பினில் கவனமாக அறிந்து ஒருமுறை செய்து பார்த்துக் கொண்டால் வாக்குச்சாவடியில் எளிதாக இருக்கும்.

இப்போது சீல் வைக்கும் பணி நிறைவடைந்து வாக்குப் பதிவிற்கு தயாராகும் நேரம்.

வாக்குப்பதிவினை துவங்க தயாராகும் முன் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
....................................................................................................................................................................................................