வாக்குப்பதிவு அலுவலராக பணிக்கு வந்து இரண்டாம் நாளில் வாக்குப்பதிவிற்கு முந்தைய பணிகளில் இருக்கிறோம்.

வாக்குப்பதிவிற்கு முந்தைய பணிகள் *மிக கவனமாக* மேற்கொள்ள வேண்டியவை பதட்டத்தில் ஒரு தவறு இழைத்துவிட்டால் தொடர்ந்து எல்லா வேலைகளும் பதட்டமானவை ஆகிவிடும்.  எனவே நிதானமாக அதே சமயத்தில் உறுதியுடன் செய்ய வேண்டியது  வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி..

வாக்குப் பதிவு எந்திரத்தில் Control  Unit ,ல் Green paper Sealஐ   எப்படி பயன்படுத்துவது  என்பதை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

Control Unit ஐ பொறுத்தமட்டில் முதலில் நாம் முத்திரையிடுவது Result section.

Result ,Clear, Print என்ற மூன்று பகுதிகள் உள்ள Result Section ன் மூடி போன்ற பகுதியில் உள்ள Frame ல்Green paper seal னை நுழைத்து Green Paper seal ன் இரு முனைகளும் சமமாக இருக்கும் வண்ணம் வைத்துக் கொள்ளவும்.

பிறகு Result Section பகுதியினை மூடி விடவும்.

Green paper seal ஐ பயன்படுத்தும் முன்னர்  அதன் Serial No ஐ குறித்துக் கொண்டு Serial no அருகில் வெள்ளை பக்கத்தில்  வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிடவும் முகவர்களிடமும் ஒப்பம் பெறவும் வேண்டும்.

Result section சீல் வைக்கும் போது பேப்பர் சீலின் எண் மேல் பக்கம் தெரியுமாறு வைக்கவேண்டும்.

பயன்படுத்துகையில் சேதமான green Paper Seal களை பயன்படுத்தக்கூடாது.
பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகையில் சேதமடைகிற Green paper seal களின் எண்களைகுறித்து வைத்து படிவம் 17 C ல்  பகுதி 1 இனம் 10ல் குறிப்பிட வேண்டும்.

பயன்படுத்தாத Green paper seal கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தியுள்ள Green Paper Seal ன் வரிசை எண்ணை முகவர்கள் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அடுத்தது SPL seal மற்றும் Strip seal  பயன்பாடு...

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*
...............................................................................................................................................................................................