>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 18 மார்ச், 2019

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 100% claim பெறுவது எப்படி...???


தஞ்சையில் தனியார் மருத்துவமனை முழு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று நிராகரித்து, பணத்தை கட்டச் சொல்லி மிரட்டிய  பொழுதும்...


ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சிகிச்சைக்கான தொகை ரூ.2,01,781 முழுவதையும் NHIS திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக பெற்ற ஆசிரியர் திரு.சதீஸ்குமார் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிப் பதிவு..




தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், தளிகைவிடுதி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சதீஸ்குமார் ஆகிய நான்,


  எனது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்..


மருத்துவமனை நிர்வாகம் ரூ.75,600 மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது எனவே மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்த சூழலில்..


TNPTF தஞ்சை மாவட்ட பொருளாளர் திரு.மதியழகன் மற்றும் திருவோணம் TNPTF வட்டாரச் செயற்குழு உறுப்பினர் திரு.தேவராஜன் ஆகிய இருவரும் முழு காப்பீட்டுத் தொகை கிடைத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்ற உறுதியுடன் அவர்கள் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாகவும், இறுதி வரை உறுதுணையுடன் உடனிருந்து, விருதுநகர் மாவட்ட TNPTF பொருளாளரும், NHIS திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு.செல்வகணேசன் அவர்களை தொடர்புகொண்டு

இரண்டாம் கட்டமாக ரூ.26,300-ம்,

மூன்றாம் கட்டமாக ரூ.99,881-ஐ பெற்று


இறுதியாக முழு மருத்துவ செலவு ரூ.2,01,781-ஐயும் காப்பீட்டுத் தொகையாக பெற்றுத் தந்தனர்..


அதுமட்டுமின்றி நான் முன் தொகையாக கட்டிய ரூ.16,944-ஐயும் திரும்ப பெற்ற பின்னரே(ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்) மிகுந்த மன நிறைவுடன் வீடு திருப்பினேன்..


NHIS திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை எனக்கு மட்டுமல்ல, என் மூலமாக நம் அனைவருக்கும் ஏற்படுத்திய மதியழகன், தேவராஜன் மற்றும் செல்வகணேசன் ஆகிய ஆசிரியர்களுக்கும்

NHIS திட்டத்திற்காக மாநில அளவில்  ஒருங்கிணைப்பாளர் குழுவினை நிர்வகித்துவரும் TNPTF மாநில மையத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..


***************************

"இது குறித்து ஆசிரியர் திரு.தேவராஜன் அவர்கள் கூறுகையில்..."


கட்டிய முன் பணம் 16,944-ல் ரூ.434 மதிப்பிலான கட்டண ரசீதை ஆசிரியர் சதீஸ் அவர்கள் தொலைந்துவிட்டார்..

ரசீதே கூட இல்லாமல் அந்த பணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் திரும்ப வழங்கியது குறிப்பிடத்தக்கது..

மீண்டும் தொடர் சிகிச்சைக்காக எங்களிடம் தான் வர வேண்டும் எனவே மீதத்தொகையை கட்டிவிட்டு டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று முதலில் அச்சுறுத்தும் வகையில் பேசிய மருத்துவமனை நிர்வாகம்..

இறுதியாக நமது அடுத்த கட்ட நகர்வினால் பதறிப்போய்..

நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை என்ற ஒப்புதல் கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு நீங்கள்இதுவரை செலவு செய்த பணம் முழுவதையும் வாங்கிச் செல்லுங்கள் என்று பணிந்தது..

(இறுதியில் ஆசிரியர் சதீஸ் அவர்களுக்கு மன உளைச்சலினால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க, அவரை மருத்துவரே கட்டித் தழுவி சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறோம் சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் என மன்றாடிய மருத்துவமனை நிர்வாகம்)

மிரட்டும் தோனியில் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தை இறுதியில் பணிய வைத்த பெருமை திரு.செல்வகணேசன் அவர்களையும் TNPTF மாநில மையத்தையுமே சேரும்....

(டிஸ்சார்ஜ் ஆகாமல் மருத்துவமனையில் உறுதியுடன் இருக்கும் பொழுது மட்டுமே முழு தொகையையும் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது)


டிஸ்சார்ஜ் ஆகிவிட்டால் வழக்கு பதிவு செய்து பெற இயலும்..
(வழக்கு பதிவு செய்து வட்டியும் ,முதலுமாக வழக்கிற்கான செலவையும் சேர்த்தே கரூரைச் சேர்ந்த ஆசிரியர் பெற்றுள்ளார்)

டிஸ்சார்ஜ் ஆன பிறகு வழக்கு பதிவு செய்த ஆசிரியருக்கு கிடைத்த தீர்ப்பில்...முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு விபரம் அறிய கீழே சொடுக்கவும்*👇
http://www.kalviseithi.net/2019/03/nhis-100-full-claim.html?m=1
********************

நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்.

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.


ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.

(காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரீனா என்ற ஆசிரியர் விபத்தில் சிக்கி கோமாவில் இருத்தல, அவர் உச்சபச்ச காப்பீட்டுத் தொகை ரூ.7,50,000-ஐ பெற்றுள்ளார்.)

அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..


NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும் 👇
http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்.. (அரசாணையில் 4,00,000 வரை Chas less treatment என்றே குறிப்பிடப்பட்டுள்ளது)

*************************

திருமணமான உசிலம்பட்டியைச் சேர்ந்த திரு.வீரபாண்டியன் என்ற டாஸ்மார்க் ஊழியர் தனது தந்தைக்கு NHIS மூலம் சிகிச்சை வேண்டி வழக்கு பதிவு செய்து வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



***************************
அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..👇
http://www.tn.gov.in/go_view/dept/9


New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்👇
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்👇
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


NHIS Insurance Compliant number -   7373073730


தோழமையுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.