பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.03.19 வியாழன்
திருக்குறள்
அதிகாரம்:புறங்கூறாமை
திருக்குறள்:183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
விளக்கம்:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
பழமொழி
After death the doctor
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
இரண்டொழுக்க பண்புகள்
1. எனது உணவானது விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உலகில் உணவு இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி
தெளிந்த அறிவும்,இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.
- பாரதியார்
பொது அறிவு
1.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?
1952
2. மாநிலங்களவையின் தலைவர் யார்?
குடியரசுத் துணைத் தலைவர்
உபயோகிக்காதே அஜினமோட்டோ!!!!!!!!
1. ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.
2. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.
3. அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது.
4. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும்.
English words and Meaning
Deputy. பிரதிநிதி
Deputation. (ஒன்றுக்கு)பதிலாக அனுப்புதல்
Valuation மதிப்பிடுதல்
Update. புதுப்பித்தல்
Upload. பதிவேற்றுதல்
அறிவியல் விந்தைகள்
*வயிற்றில் 35 இலட்சம் சீரண சுரப்பிகள் உள்ளன.
* தாடை எலும்பு உடலின் வலிமையான எலும்பு
* உடலின் இறந்த செல்கள் தான் நம் வீட்டில் உள்ள தூசியில் பெரும் பங்கு வருகிறது
*உலகின் அதிக அறிவாளியானவர்களின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு அதிக அளவில் காணப்படும்.
Some important abbreviations for students
* ICMR - Indian Council of Medical Research
* IDBI - Industrial Development Bank of India
நீதிக்கதை
ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்.
இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.
பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.
மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.
இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.
வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.
ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.
அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.
“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.
இன்றைய செய்திகள்
14.03.2019
* 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்: 9.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
* இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள லாகுல் ஸ்பிட்டி மாவட்டம் ஹிக்கிம் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 567 அடி உயரம் கொண்டது. இங்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிதான் நாட்டிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள வாக்குச்சாவடியாக அமைந்த உள்ளது.
* கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
* 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு.
* டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா தொடரை 2-3 என்று இழந்தது.
Today's Headlines
* 10th Class Examination Starts Today: 9.97 lakhs students are writing.
* Lakhul Spiti district in Himachal Pradesh is going to be the highest polling station in India. It is 14 thousand 567 feet from sea level.
* Due to the heavy temperature in Salem, the price of lemon is rising sharply.
* Tamilnadu Examination board announced to finish the paper correction of 10 th std before April 13 th.
* India lost the last ODI match against Australia in Delhi. So India lost the series too.
Prepared by
Covai women ICT_போதிமரம்

..................................................................................................................................................................................