ரூ.1.2 கோடி சம்பளத்துக்கு கூகுளில் வேலை பெற்ற சாதாரண கல்லூரி மாணவர்
ரூ.1.2 கோடி சம்பளத்துக்கு கூகுளில் வேலை பெற்ற சாதாரண கல்லூரி மாணவர்
An ordinary college student who worked in Google for a salary of Rs. 1.2 crore
பிரபல வலைதள நிறுவனமான கூகுளில், மும்பையை சேர்ந்த சாதாரண கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் வருடத்திற்க ரூ.1.2 கோடி சம்பளத்தில் பணி ஆணை பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பொதுவாக ஐஐடி, எம்ஐடி போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கே இதுபோன்ற உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும் நிலையில், சாதாரண கல்லூரியில் படித்த மாணவன் ஒருவர் 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் அப்துல்லா கான். இவர் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு, அதற்கான தேர்வுகளை எழுதிய நிலையில், தோல்வி அடைந்ததால், சாதாரண கல்லூரியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார்.
அதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்திருந்த அப்துல்லா கானுக்கு, இன்டர்வியூ குறித்து தகவல் வந்தது. அதையடுத்து, ஆன்லைன் மூலமே அவரிடம் நேர்காணல் நடைபெற்றது.
இவைகள் அனைத்திலும் அப்துல்லாகான் தேர்ச்சி பெற்ற நிலையில், இறுதிச்சுற்று இன்டர்வியூவுக்காக லண்டனுக்கு அழைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற நேர்காணலில் வெற்றிபெற்ற அப்துல்லாகானுக்கு கூகுள் நிறுவனம் பணி ஆணை வழங்கியது. அவருக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 54.5 லட்சம்) போனஸ், 85 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 58.9 லட்சம்), ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படும் என்றும் பணி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்துல்லா கான், கூகுளில் பணி கிடைக்கும் என்பது குறித்து தான் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்டர்வியூ காரணமாக தனக்கு அனுபவம் கிடைக்கும் என்பதாலேயே பங்கேற்றேன்.ஆனால் எனக்கு வேலை கிடைத்துவிட்டது.. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன் என்று கூறியுள்ளார்.
.........................................................................................................................................................................................................................................................................................................................................................................