6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி
(டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.