இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள்
அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்படுவது வழக்கம். வரும் கல்வி ஆண்டில்,
அதாவது, 2018 ஜூனில் துவங்கும், மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. விருப்ப பாடம் இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது. மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்து, கணினி வழியாக விண்ணப்பித்து, ஆன்லைனில் விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். கணினி இயக்குவதில் சிரமம் உள்ளவர்கள், ஆன் லைன் வசதி கிடைக்காதவர்கள் மற்றும் கிராம மாண வர்களின் வசதிக்கு, மாநிலம் முழுவதும், 44 கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்படும்.அரசு இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக் குகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் என, 44 இடங்களில், மையங்கள் இயங்கும். இதில், மாவட்டத்திற்கு ஒரு மையம் அமைக்கப்படும். பெரிய மாவட்டமாக இருந்தால், அவற்றில், இரண்டு மையங்கள் அமைக்கப்படும்.இந்த உதவி மையங்களில், எந்த காரணத்திற்காக வும், தனியார் கல்லுாரிகள் ஈடுபடுத்தப்பட மாட்டாது. இந்த மையத்தில், ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு, வழிகாட்டும் குழுவினர் இருப்பர். அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன், மாணவர்கள், தங்களின் சொந்த விருப்பத்தில், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்.இந்த மையங்களை, கவுன்சிலிங் நாளுக்கு மட்டுமின்றி, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் பயன்படுத்தலாம்; அதற்கும் வசதிகள் செய்யப்படும். இந்த திட்டத்தால், 21 ஆண்டுகளாக நடந்த, ஒற்றை சாளர கவுன்சிலிங் முடிவுக்கு வருகிறது.கவுன்சிலிங்குக்கான தேதி, விண்ணப்ப பதிவு துவங்கும் நாள், கடைசி நாள், துணை கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'ரேண்டம்' எண் மற்றும் தரவரிசை வெளியிடப்படும் தேதி போன்றவை, விரைவில் அறிவிக்கப்படும். கவுன்சிலிங் தொடர்பாக, விரிவான வழிகாட்டுதல், அண்ணா பல்கலையால் வழங்கப்படும்.மேலும், கவுன்சிலிங்குக்கு பதிவு செய்வோருக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு நாளில், கல்லுாரிகளின் பட்டியல் அடங்கிய, கையேடுகள் தரப்படும். அதில் இருந்து, கல்லுாரிகளின் பதிவு எண், பெயர், மாவட்டம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், கவுன்சிலிங்கை எப்படி அணுகுவது என்ற வழிகாட்டுதல், விண்ணப்ப படிவத்தின் மாதிரி, நிரப்பும் முறை போன்றவை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார். கவுன்சிலிங் நடப்பது எப்படி? ஆன்லைன் முறையில் இன்ஜி., கவுன்சிலிங் முறை குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:* ஆன்லைன் கவுன்சிலிங்கை, மாணவர்களுக்கு எந்த சிரமமும் இன்றி நடத்த, ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக, விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள கணினி வழியாகவோ, அரசின் கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்* ஒவ்வொரு மாணவரும், பயனாளர் அடையாள குறியீடு மற்றும் ரகசிய எண்ணை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் தயாரித்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஆன்லைனில் பதிவு செய்ய படும். அதை, 'யூசர் ஐடி' வழியே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்* விண்ணப்ப பதிவுக்கு பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். வீட்டில்இருந்தே, ஆன் லைனில் பதிவு செய்தவர்கள், சான்றிதழ் சரி பார்ப்புக்கு,உதவி மையம் வர வேண்டும். உதவி மையத்திலேயே பதிவு செய்தவர்களும், சான்றிதழ் சரி பார்ப்புக்கு வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நகல்கள், புகைப்படத்துடன் வரவேண்டும்* பின், மதிப்பெண் தரவரிசையை உறுதி செய் வதற்கான, ரேண்டம் எண்; தரவரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும். தர வரிசையின்படி, ஐந்து சுற்றுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கும். ஒவ்வொரு மாணவருக்கும், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடவடிக்கைகள் இருக்கும்* முதல் மூன்று நாட்கள், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விருப்ப பட்டியலில், ஒவ்வொரு மாணவரும், கணினியில் காட்டும் கல்லுாரிகள் மற்றும் இடங்களில், விருப்பப் பட்ட எண்ணிக்கையில், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்* முதல் நாள் முதல், மூன்றாம் நாள் மாலை, 6:00 மணி வரை, விருப்ப பதிவுக்கு, 66 மணி நேரம் அவகாசம் தரப்படும். * மூன்றாம் நாளில், மாலை, 6:00 மணியுடன் விருப்ப பட்டியல் பக்கம், 'லாக்' செய்யப்படும். அன்று இரவே, மாணவர்களுக்கான தோராய மான இட ஒதுக்கீட்டை, இன்ஜி., கமிட்டி, ஆன்லைனில் வழங்கும். மாணவர்கள் அதை பார்த்து, நான்காம் நாளில் உறுதி செய்து, ஆன்லைனில் பதில் அளிக்க வேண்டும்* ஐந்தாம் நாளில், அவர்கள் உறுதி செய்த இடம் ஒதுக்கப்பட்டு, டிஜிட்டல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். ஒரு முறை ஒதுக்கீடு பெற்றவர் கள், அதை ரத்து செய்யலாம்; மீண்டும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது* தரவரிசைப்படி, மாணவர்களுக்கு ஒதுக்க பட்ட நாட்களில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களின் பெயர், மதிப்பெண் அடிப்படையில்,அடுத்த சுற்றுக்கு வந்துவிடும். அடுத்த சுற்றில், எந்த கல்லுாரிகளில் இடங்கள் இருக்கிறதோ அவற்றில்,இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.