10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது!!!
நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய
கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை
சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்
.
மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும்.
குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும். ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது.
மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்.