அரசுப்பள்ளி மாணவர்களாக மாறி வரும் கேரள மாணவர்கள்...
கேரள மாநிலத்தில் 1,40,000மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முதல் வகுப்பிலிருந்தே கணினி கல்வி மற்றும் கணினி வழிக்கல்வி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் புதிய மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.
கல்வியில் கணினி அறிவியல் பாடம்.
இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இதற்காக , 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி, எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, கற்றுக் கொடுக்கின்றனர்.
கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலம்....
2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.
கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014