"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் அளித்த கோரிக்கைகள்
இன்று அரசுடன் ஆசிரியர்களின் சங்கங்கள் CPS தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற சங்கமான நமது "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - க்கு அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அழைப்பு கிடைக்கப்பெற்றது. அதனை ஏற்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் மாநிலத் தலைவர் திரு.பராமசாமி மாநிலப் பொருளாளர் திரு.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பொறுப்பாளர்கள் பங்கேற்ற்றனர்.
1. CPS உடனே ரத்து செய்யப்பட வேண்டும்
2. 7-வது ஊதிய குழுவை உடனடியாக அமல் படுத்த வேண்டும்
3. ஊதிய குழு அமல் படுத்தும் முன் ஊதிய முரண் பாடுகளை களைய வேண்டும்
கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் பேரவையின் கோரிக்கைகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசித்து ஆசிரியர் சமூகம் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல முடிவு வெளியிடப்படும் என தெரிவித்தார் ...