இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?
கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

அப்போது, இலவச லேப் - டாப் பெறும் மாணவர்கள், இணையதள விளையாட்டில், நேரத்தைசெலவிடுவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் லேப் - டாப்களில், 'கேம் அப்ளிகேஷனை' நீக்கவும், அது போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.