திட்டமிட்டபடி அரசு ஊழியர், ஆசிரியர் ஸ்டிரைக் : ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்..
ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடாததால், இன்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் துவங்குகிறது என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் குறித்து, ஈரோட்டில் நிர்வாகிகளுடன் முதல்வர் பேசினார். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து உறுதியளிக்கவில்லை. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி, புதிய ஓய்வூதிய கமிட்டி தெரிவிக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் இன்று துவங்குகிறது. பத்து லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இன்று தாலுகா தலைநகரங்களில் மறியலும், நாளை மாவட்ட தலைநகரங்களில் மறியலும் நடக்கும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, செப்., 10 ம் தேதி, சென்னையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவு செய்யும், என்றார்.''இந்த போராட்டத்தில் மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்,'' என, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் தெரிவித்தார்.