ஜியோ ரீசார்ஜ் செய்பவர்களா நீங்கள்... உங்களுக்கு ஜியோ வழங்கும் புதிய கேஷ்பேக் சலுகைகள்!!
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி சலுகையை தொடர்ந்து பெற இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த ரீசார்ஜ் செய்யும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளன.
இதற்காக ஜியோ மொபைல் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களை குறிவைத்து கவரும் விதமாக ஆன்லைன் பேமெண்ட் போர்ட்டல்கள். பேடிஎம், மொபி க்விக், அமேசான் பே என அனைத்து ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்களும் கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித் தருகின்றன.
வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ப்ரோமோ கோடினை தெளிவாக படித்து அதன்பின் பதிவிட வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்டதும் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும்.
இதுதவிர போன் பெ (PhonePe app) செயலி மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிற்கு ரூ.300க்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகள் அந்நிறுவன இணையப்பக்கம் மற்றும் மைஜியோ செயலியில் பார்க்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் திட்டங்கள் விலை ரூ.19 முதல் துவங்குகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலை ரூ.309 முதல் துவங்குகிறது.
பேடிஎம் (Paytm):
பேடிஎம் மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 15 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 76 ரூபாய் கேஷ்பேக் தருகிறது பேடிஎம். வழக்கம்போல, ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்தில் உங்கள் பேடிஎம் கணக்கில் கேஷ்பேக் தொகை வந்துவிடும்.
ஃபோன்பே (PhonePe): ஃபோன்பே மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 75 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் ஜியோ ரீசார்ஜ் செய்தால் இந்த ஆஃபர் கிடைக்கும். ஆகஸ்ட் 21 வரை மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.
மொபி க்விக் (MobiKwik): மொபிக்விக் மூலம் 399 ரூபாய்க்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 59 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் JIOMBK). இதுவே நீங்கள் செய்யும் முதல் ஜியோ ரீசார்ஜ் என்றால் 159 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் NEWJIO).
அமேசான் பே (Amazon Pay): அமேசான் பே மூலம் ரூ.309 அல்லது அதற்கு மேலான தொகைக்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 99 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். நவம்பவர் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.20 கிடைக்கும். இப்படியே 300 ரூபாய் வரை மட்டுமே கேஷ்பேக் பெறலாம். ரீசார்ஜ் செய்த 7 நாள்களுக்கு இந்த கேஷ்பேக் அக்கவுண்டுக்கு வரும்.
ரூ.309 முதல் ரூ.9,999 வரையிலான அனைத்து ப்ரிபெய்ட் டேட்டா பிளான்களுக்கும் வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னதாக ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக, ஆண்டு கட்டணமாக ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. ஆனால் அதன்பின் ஜியோ ப்ரைம் உறுப்பினராக ஜியோ மணி என்ற இ-வாலட் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்து அதன் மூலம் ரூ.99 மற்றும் ரூ.303 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்-பேக் சலுகை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது