இன்ஜி., கவுன்சிலிங்: சீரானது குளறுபடி
இன்ஜி., கவுன்சிலிங்குக்கான, விண்ணப்ப பதிவில் ஏற்பட்ட குளறுபடி சரிசெய்யப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 1ல் துவங்கியது. அரசு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்காக, www.tnea.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியது. மாணவர்களுக்கான விபரங்கள் பதிவு செய்யும் பகுதியில், 15வது பிரிவில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட விதிகளில் குழப்பம் ஏற்பட்டது. அதே நேரம், சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு விதிகளே இணைக்கவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து, நமது தினமலர் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, இன்ஜி., மாணவர் சேர்க்கை குழு, இணையதளத்தை ஆய்வு செய்து, விதிகள் இல்லாத பகுதிக்கு, விதிகளை இணைத்துள்ளது. மேலும், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான விரிவான விதிகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.