தமிழக அரசுப் பள்ளிகளில் வருகிறது இலவச வைஃபை!
தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைஃபைவசதி வழங்க முடிவுசெய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு முதல் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று எல்லப்பம்பாளையம் கிராமத்தில் ஒரு விழாவில் பேசிய செங்கோட்டையன், பொதுத் தேர்வுகளின் ரேங்க்கிங் முறையை ரத்துசெய்ததுகுறித்துப் பேசினார். அப்போது, ‘10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதால், மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்’, என்றார்.மேலும் பேசிய செங்கோட்டையன்,’ அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் பாடம் கற்றுக்கொடுக்கப்படும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வைஃபை வசதி வழங்கப்பட உள்ளது. ஆண்டு விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு ஒரே வாரத்தில் லேப்டாப் வழங்கப்படும்’ என்று அவர் உறுதி அளித்துள்ளார்.