ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா? முதல்வர் அதிரடி
லக்னோ: அரசு பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேணடும்என உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
யோகியின் அதிரடிகள்
உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர்யோகிஆதித்யநாத் அம்மாநிலத்தில்முதல்வராக பொறுப்பேற்றது முதல்பல்வேறு அதிரடியான உத்தரவுகளைபிறப்பித்து வருகிறார். அரசுஅலுவலகங்களில் துப்பினால் அபராதம்,வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை,அதிகாரி மாற்றம், 15 பொது விடுமுறைதினங்கள் ரத்து என அதிரடியானஉத்திரவுகளை பிறப்பித்து வருகிறார்.
ஆசிரியர் புகைப்படம்
நேற்று 02.05.17) அவரின் அடுத்த அதிரடி,அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும்எனவும், ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளஆசிரியர்கள் சரியாக பள்ளிக்குவருகிறார்களா என அதிகாரிகள் சோதனைசெய்ய வேண்டும். அப்படி சோதனைசெய்யும்போது மாணவர்களிடம்புகைப்படத்தை காட்டி சரியாகவருகிறார்களா என கேட்டு உறுதிப்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கல்வியின் நிலைமை
உ.பி., முதல்வர் இது குறித்து கூறும்போது:உத்திரபிரதேசத்தில் உள்ள அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாகவேலைக்கு வராததால் கல்வியின் நிலைமைமிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல்அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்குபதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாகபுகார் வந்ததால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகவும், கல்வியின் தரத்தைமேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு நடவடிக்கை
மேலும் அவர் கூறும்போது: அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காகபள்ளிக்கு வரவேண்டும். அதிகாரிகள்மாணவர்களிடம் புகைப்படத்தில் உள்ளஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? எனஅடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும், அப்படி வேலை செய்யாதஆசிரியர்கள் சம்பளம் வாங்கமுடியாது எனதெரிவித்துள்ளார்.