அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறுவனர் பாவலர் திரு. குகானந்தம் அவர்களுக்கு மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் சால்வை அணிவிப்பு
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிறுவனர் பாவலர் ,தேசிய நல்லாசிரியர் திரு. குகானந்தம் அவர்கள் தலைமையில் பேரவையின் மாநிலத்து தலைவர் திரு பராமசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு.கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை சென்னையில் சந்தித்தனர் .
உடல்நலமின்றி இருக்கும் பேரவையின் நிறுவனர் திரு. குகானந்தம் அவர்களை நலம் விசாரித்த அமைச்சர் பேரவையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்தார். சந்தித்தபின் போது மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பேரவையின் நிறுவனர் திரு. குகானந்தம் அவர்கள் சால்வை அணிவிக்க முற்பட்ட போது அமைச்சர் அவர்கள் பொன்னாடையை திருப்பி நிறுவனர் அவர்களுக்கே போர்த்தி மகிழ்ந்தார்