சுருக்கெழுத்து பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் கீழ் மாணவர்களுக்கு சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க,சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், குறிப்பிட்ட பிரிவினர்களுக்காக பல்வேறு இலவச வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.
இதன்படி, சுருக்கெழுத்துப் பயிற்சியை அளிக்க விரும்பும் நிறுவனங்கள், பயிற்சிக்கான உட்கட்டமைப்பு, இடம் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டிருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, எண்ணியல் திறன், தட்டச்சு, சுருக்கெழுத்து, அடிப்படை கணிணி பயிற்சி ஆகிய பயிற்சிகளை படித்துவிட்டு வேலை தேடும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு அளிக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திற்கு தொழில்முறை கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தலா ரூ.800 அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் 'துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலர், தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், குடிசை மாற்று வாரியக் கட்டடம், 56 மூன்றாவது மாடி, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004' என்ற முகவரியை அல்லது 044-2461 5112 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் ஜூன் 2 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.