கல்லூரியைப் போல +1ல் தோல்வி அடைந்த பாடத்துக்கு அரியர் தேர்வு.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை, கல்லூரிகளில் எழுதுவது போல அரியர் தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18ம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொதுத் தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து +2 படிக்கலாம். தோல்வி அடைந்த பாடத்தைப் படித்து ஜூன் அல்லது ஜூலையில் அரியர் தேர்வெழுதி தேர்ச்சி பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், +1 வகுப்புக்கான செய்முறை தேர்வும், +2 வகுப்புக்கான செய்முறை தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதுநிலை ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்றும் தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.