திட்டமிட்டபடி மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயிரி - விலங்கியல் பாடத்தில் பி வகை வினா 16, ஏ வகை வினா 14 ஆகியவற்றை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என இரு தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும், மதிப்பிடும் பணி முடிந்திருந்தால் மறு கணக்கீடு செய்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இந்த தீர்ப்புக்கு தடையாணை வழங்கியுள்ளது. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.